கம்பராமாயணம் 9635 · யுத்த 31.48

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'புறவு அதன் பொருட்டால் யாக்கை புண் உற அரிந்த புத்தேள்
அறவனும், ஐய! நின்னை நிகர்க்கிலன்; அப்பால் நின்ற
பிற இனி உரைப்பது என்னே? பேர் அருளாளர் என்பார்
கறவையும் கன்றும் ஒப்பார், தமர்க்கு இடர் காணில் 'என்றான்.

பொருள் · Meaning in Tamil

ஐய! புறவு ஒன்றின் பொருட்டு - ஐயனே! தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவிற்காக; இன்யாக்கை புண் உற அரிந்த புத்தேள் அறவனும் - தன் இனிய உடம்பை புண் உண்டாகத் தசை அரிந்தளித்த தெய்வத்தன்மையுள்ள அறவானாம் சிபியும்; நின்னை நிகர்க்கிலன் - உனக்கு ஒப்பாக மாட்டான்; அப்பால் நின்ற பிறவினை உரைப்பது என்னே - அதற்குப் பிறகு ஒழிந்த பிற செயல்களைக் கூறுவது என்ன பயன்? பேர் அருளாளர் என்பார் - பெரிய அருளாளர் எனப்படுவோர்; தமர்க்கு இடர் காணில் - தம்மைச் சார்ந்தவர்க்குத் துன்பம் வரக் கண்டால்; கறவையும் கன்றும் ஒப்பார் என்றான் - பசுவையும் கன்றையும் போல் விரைந்து சென்று காப்பர் என்று கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Even the divine righteous one who cut his body until it bled for the sake of a single dove,
  2. sir, does not equal you; why speak of other deeds
  3. that lie beyond that? Those who are called greatly gracious
  4. are like a cow and its calf when they see harm come to their own', he said.

What the poem says

Irāmaṉ praises his brother further. He recalls King Śibi, who cut flesh from his own body to save a dove that had come to him for protection, and says that even Śibi cannot match what Ilakkuvaṉ has done. There is no need to mention lesser examples.

Truly compassionate people, he says, rush to protect those who depend on them, as a cow hurries to her calf when it is in danger.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'puṟavu oṉṟiṉ poruṭṭiṉ yākkai puṇ uṟa arinta puttēḷ
aṟavaṉum, aiya! niṉṉai nikarkkilaṉ; appāl niṉṟa
piṟa viṉai uraippatu eṉṉē? pēr aruḷāḷar eṉpār
kaṟavaiyum kaṉṟum oppār, tamarkku iṭar kāṇkil 'eṉṟāṉ.