கம்பராமாயணம் 9637 · யுத்த 32.1

Section யுத்த காண்டம் / 32. வானரர் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆயபின், கவியின் வேந்தும், அளப்பருந் தானையோடும்
மேயினன், இராமன் பாதம் விதிமுறை வணங்கி, வீந்த
தீயவர் பெருமை நோக்கி, நடுக்கமும், திகைப்பும் உற்றான்,
ஓய்வுறு மனத்தான் ஒன்றும் உரைத்திலன், நாணம் உற்றான்.

பொருள் · Meaning in Tamil

ஆய பின் - அதன் பிறகு, கவியின் வேந்தும் அளப்ப அருந்தானையோடும் மேயினன் - சுக்ரீவனும் அளக்க முடியாத தன் வானரப் படையோடு வந்து சேர்ந்தான்; இராமன் பாதம் விதிமுறை வணங்கி - இராமனின் திருவடியைத் துதித்து; வீந்த தீயவர் பெருமை நோக்கி - இறந்துபட்ட அரக்கரின் பெருக்கைக் கண்டு; நடுக்கமும் திகைப்பும் உற்றார் - நடுக்கமும் திகைப்பும் கொண்டார்; ஓய்வுறு மனத்தார் ஒன்றும் உணர்ந்திலர் - ஓய்ந்த உள்ளத்தினராய் எதுவும் உணரவில்லை; நாணம் உற்றார் - வெட்கப்பட்டார்

இளைப்பாறிய செய்தி முன் படலத்திலுளது. அரக்கர் பெருக்கைக் கண்டதும் நடுக்கமும் அவர்கள் அனைவரையும் இராமன் ஒருவனே கொன்றான் என எண்ணி வியப்பும் கொண்டார், 'இத்தகைய வலிமை படைத்த இராமனுக்கு நாம் உதவுகின்றோம்' என எண்ணிய சுக்கிரீவன் முதலானார்க்கு நாணம் உண்டாயிற்று. எனவே பேச்சடங்கி நின்றனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. After that, the king of the monkeys too, with his countless army,
  2. came, and bowed in due form at Irāmaṉ's feet; seeing the vastness of the wicked ones who had perished,
  3. they trembled and were bewildered; their minds exhausted,
  4. they could not take anything in; and they were ashamed.

What the poem says

A new section begins in which the monkeys view the battlefield. Cukkirīvaṉ, king of the monkeys, arrives with his vast army and bows at Irāmaṉ's feet in due form.

When the monkeys see the enormous number of dead demons, they tremble and are stunned. They realise that Irāmaṉ killed them all by himself, and they feel ashamed to have thought they were helping a hero of such power. Lost for words, they stand in silence.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āya piṉ, kaviyiṉ vēntum, aḷappa arun tāṉaiyōṭum
mēyiṉaṉ, irāmaṉ pātam viti muṟai vaṇaṅka, vīnta
tīyavar perumai nōkki, naṭukkamum, tikaippum uṟṟār,
ōyvuṟu maṉattār oṉṟum uṇarntilar, nāṇam uṟṟār.