கம்பராமாயணம் 9638 · யுத்த 32.2

Section யுத்த காண்டம் / 32. வானரர் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மூண்டு எழு சேனை வெள்ளம் உலகு ஒரு மூன்றின் மேலும்
நீண்டு உளது அதனை, ஐய! எங்ஙனம் நிமிர்ந்தது? 'என்ன
தூண் திரண்டு அனைய திண்தோள் சூரியன் சிறுவன் சொல்லக்
'காண்டிநீ, அரக்கர் வேந்தன் தன்னொடும் களத்தை 'என்றான்.

பொருள் · Meaning in Tamil

ஐய! - இராமனே; மூண்டு எழு சேனை வெள்ளம் - போரில் பகைமிகுந்து எழும் சேனைப் பெருக்கம்; உலகு ஒரு மூன்றின் மேலும் நீண்டுஉள - மூன்றுலகங்களை விட நீண்டுள்ளன; அதனை எங்ஙனம் நிமிர்ந்தது? என்ன - அப்படிப்பட்டதை எவ்வாறு வென்றது என்று; தூண்திரண்டனைய திரள் தோள் சூரியன் சிறுவன் சொல்ல - தூண் பருத்துள்ளது போல் திண்ணிய தோளையுடைய சூரியன்மகனாம் சுக்கிரீவன் கேட்க; 'நீ அரக்கர் வேந்தன் தன்னொடும் களத்தைக் காண்டி' என்றான் - 'நீ வீடணனொடு சென்று போர்க்களத்தை நேரில் பார்' என்று இராமன் சொன்னான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The flood of the army that rose up in fury stretched beyond
  2. the three worlds; sir, how was it overcome?' When
  3. the son of the Sun, with strong shoulders thick as pillars, said this,
  4. he answered, 'Go and see the field, together with the king of the demons.'

What the poem says

Cukkirīvaṉ, son of the Sun god, with shoulders as thick as pillars, asks Irāmaṉ how an army larger than the three worlds could possibly have been defeated.

Rather than explain, Irāmaṉ tells him to go and see the battlefield for himself in the company of Vīṭaṇaṉ. Irāmaṉ calls him the king of the demons, since he has promised him the throne of Ilaṅkai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mūṇṭu eḻu cēṉai veḷḷam ulaku oru mūṉṟiṉ mēlum
nīṇṭu uḷa ataṉai, aiya! eṅṅaṉam nimirntatu? 'eṉṉata
tūṇ tiraṇṭaṉaiya tiṇ tōḷ cūriyaṉ ciṟuvaṉ colla
'kāṇṭi nī, arakkar vēntaṉtaṉṉoṭum kaḷattai 'eṉṟāṉ.