கம்பராமாயணம் 964 · பால 15.1

Section பால காண்டம் / 15. பூக்கொய் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மீன் உடை எயிற்றுக் கங்குல் கனகனை வெகுண்டு, வெய்ய
கான் உடைக் கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சித்,
தான் உடை உதயம் என்னும் தமனியத் தறியில் நின்று,
மானுட மடங்கல் என்னத் தோன்றினன் வயங்கு வெய்யோன்.

பொருள் · Meaning in Tamil

மீனுடை எயிற்றுக் கங்குல் கனகனை வெகுண்டு - விண்மீன்களைப் பற்களாகக் கொண்ட இரவாகிய இரணியனைச் சினந்து; வெய்ய கான் உடைக் கதிர்கள் என்னும் - வெப்பம் உடைய செறிந்த கிரணங்கள் என்கின்ற; ஆயிரம் கரங்கள் ஓச்சி - ஆயிரம் கைகளை வீசி, தான் உடை உதயம் என்னும் - தான் தோன்றுதற்கு இடமான உதயகிரி என்கின்ற; தமனியத் தறியுள் நின்று - தங்கத் தூணிலிருந்து; மானுட மடங்கல் என்ன - நரசிங்கப் பெருமாள் (தோன்றியது) போல; வயங்கு வெய்யோன் தோன்றினன் - ஒளியுமிழ்ந்தவண்ணம் கதிரவன் உதித்தான். உருவகத்தை உறுப்பாகக் கொண்ட உவமையணி. சூரியன் ஆயிரமாயிரம் கிரணங்களையுடையவன். ஆதலால் ஆயிரமாயிரம் கைகளோடு தோன்றிய நரசிங்கப் பெருமானாக உவமிக்கப் பெற்றான். “ஆயிரங் கரங்கள் ஓச்சி” என்பதில் ஆயிரம் என்பது மிகுதி குறித்து நின்றது. “கையாயிரம் அல்ல கணக்கிலவால்” கம்ப. 6304 என நரசிங்கம் ஆயிரமாயிரம் கரங்களோடு தோன்றியதெனப் பின்னும் குறிப்பர். “ஆயிரந்தோள் எழுந்தாடப் பைங்கண் இரண்டு எரிகான்ற நீண்ட எயிற்றோடு பேழ்வாய்ச் சிங்க உருவின் வருவான்.” (பெரிய திரு. -3-8) எனத் திருமங்கையாழ்வாரும் இக்கோலத்தை வருணிப்பார். உதய காலத்தே உதயகிரி பொன்னிறம் பெற்றுப் பொலியுமாதலின் அது நரசிங்கம் உதித்த பொன் தூணுக்கு உவமையாயிற்று. நரசிங்கம் எனும் வடசொல்லை “மானுடமடங்கல்” என மொழியாக்கம் செய்தார். மேலும் “மானுடமடங்கல்” (கம். 6304) என்பார். “நரங்கலந்த சிங்கமாய்” (இரண் திருவந. 84) “அறியும் மானுடமும் உடனாய்த் தோன்ற” (திருமங். 8-8-4) என ஆழ்வார்களும் குறிப்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Enraged at Kaṉakaṉ, the night whose fangs are the stars,
  2. brandishing a thousand hands, his dense, burning rays,
  3. standing within the golden pillar that is the eastern mountain where he rises,
  4. the blazing sun appeared like the Man-Lion.

What the poem says

A new canto, the Gathering of Flowers, opens with the next morning. The sunrise is pictured as the appearance of Narasiṃha, the Man-Lion form of Viṣṇu. In the story, he burst out of a golden pillar to kill the demon king Hiraṇyakaśipu, here called Kaṉakaṉ ("Golden One").

Night, with the stars for its fangs, is the demon. The sun's countless rays are the god's thousand arms. The eastern mountain, glowing gold at dawn, is the pillar he springs from. The Tamil phrase māṉuṭa maṭaṅkal, "man-lion", is the poet's own Tamil rendering of the Sanskrit name, and the Āḻvār saints describe the Man-Lion in similar terms.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mīṉuṭai eyiṟṟuk kaṅkul kaṉakaṉai vekuṇṭu, veyya
kāṉuṭaik katirkaḷ eṉṉum āyiram karaṅkaḷ ōcci,
tāṉuṭai utayam eṉṉum tamaṉiyat taṟiyuḷ niṉṟu,
māṉuṭa maṭaṅkal eṉṉat tōṉṟiṉaṉ vayaṅku veyyōṉ.