கம்பராமாயணம் 965 · பால 15.2

Section பால காண்டம் / 15. பூக்கொய் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முறை எலாம் முடித்த பின்னர் - நாட்கடமைகளையெல்லாம் (செய்து) முடித்த பின்பு; மன்னனும் மூரித் தேர்மேல் - தசரதச் சக்கரவர்த்தியும் வலிமை வாய்ந்த (தன்) தேர்மேலே; இறை எலாம் வணங்கப் போனான் - (உடன்வந்த) மன்னர்கள் அனைவரும் வணங்கப் புறப்பட்டான்; உடன் எழு சேனைவெள்ளம் - அவனுடன் புறப்பட்ட படைத் தொகுதியும்; குறை எலாம் சோலை ஆக - (தான் சென்றடையாத) ஆற்றிடைக் குறைகளையெல்லாம் மலர்ச் சோலையாகச் செய்தும்; குழிஎலாம் கழுநீர்ஆகி - தான் சென்ற பள்ளங்களையெல்லாம் செங்கழுநீர் மலர்க்கூட்டம் ஆகச் செய்தும்; துறை எலாம் கமலம் ஆன - (மக்கள் இறங்கும்) நீர்த்துறைகளையெல்லாம் தாமரை பூத்த தடாகங்கள் ஆகச் செய்தும் உள்ள; சோணையாறு அடைந்து - சோணையாற்றினை சென்றடைந்தது.

“முறையெல்லாம் முடித்த பின்னர்” என்பதனால் எந் நிலையிலும் தசரத வேந்தர் முறை வழாதவர் என்பது குறித்தவாறு. முறை: அன்றன்று முடிக்க வேண்டிய கடமைகள். “குழி எலாம் கழுநீர்” (கம்ப. 33) என வேறிடத்தும் குறிப்பார். ஆற்றினிடையே நீர் மூழ்காத இடம் ஆற்றிடைக் குறை எனவும், அரங்கம் எனவும் பெயர் பெறும். ஆறு உலகை அழகுக் குவியலாக மாற்றுகின்ற ஒன்று ஆதலால், “குறையெலாம் சோலை ஆகி, குழியெலாம் கழுநீர் ஆகித் துறையெலாம் கமலம் ஆன சோணையாறு” என்றார். இறுதியிரண்டடியில் உள்ள சொல் இன்பமும் சுவைக்கத் தக்கவை. கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனும் நால்வகைப் பூக்களையும் செழிக்கச் செய்து நடக்கிறது சோணை நதி என்பது குறிப்பு. சேனை வெள்ளம் சோணை வெள்ளத்தையடைந்தது என்பது ஒரு நயம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When all the day's duties were done, the king too, in his mighty chariot,
  2. set out with all the kings bowing to him; and the flood of the army rising with him
  3. reached the river Cōṇai, where every islet is a grove,
  4. every hollow is full of red water lilies, and every bathing ghat is lotuses.

What the poem says

After performing all his morning duties, for Tacarataṉ never neglects what is proper, the king sets off in his chariot with the vassal kings bowing to him.

The army reaches the river Cōṇai (the Son). Its islands are covered in flowering groves, its hollows are full of red water lilies, and its bathing steps are surrounded by lotuses. The river makes every kind of flower flourish. There is also a sound-play in the Tamil: the flood of the cēṉai, the army, meets the flood of the Cōṇai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṟai elām muṭitta piṉṉar, maṉṉaṉum murit tērmēl
iṟai elām vaṇaṅkap pōṉāṉ; eḻuntu uṭaṉ cēṉai veḷḷam
kuṟai elām cōlai āki, kuḻi elām kaḻunīr āki,
tuṟai elām kamalam āṉa, cōṇai āṟu aṭaintatu aṉṟē.