கம்பராமாயணம் 966 · பால 15.3

Section பால காண்டம் / 15. பூக்கொய் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அடைந்து அவண் இறுத்த பின்னர், அருக்கனும் உம்பர்ச் சார,
மடந்தையர் குழாங்களோடு, மன்னரும், மைந்தர் தாமும்,
குடைந்து வண்டு உறையும் மென் பூ கொய்து இனிது ஆட, மைதீர்
தடங்களும் மடுவும் சூழ்ந்த தண் நறும் சோலை சார்ந்தார்.

பொருள் · Meaning in Tamil

அவண் அடைந்து இறுத்த பின்னர் - அச்சோணை யாற்றின் கரையில் அச்சேனைத் தொகுதி தங்கிய பின்பு; அருக்கனும் உம்பர்ச் சேர்ந்தான் - சூரியனும் வான் மேல் ஏறினான்; மடந்தையர் குழாங்களோடும் - (தத்தம்) மனைவியர் கூட்டங்களோடு; மன்னரும் மைந்தர்தாமும் - அரசர்களும் இளவரசர்களும்; வண்டு குடைந்து உறையும் மென்பூக் கொய்து - வண்டுகள் துளைத்துத் திளைக்கும் மெல்லிய மலர்களைப் பறித்து; நீராட - (நீரில்) மகிழ்ந்து விளையாட; மைதீர் தடங்களும் மடுவும் - தூய தடாகங்களும் மடுக்களும் சுற்றியுள்ள; தண் நறுஞ் சோலை சார்ந்தார் - குளிர்ச்சியும் மணமும் மிக்க சோலையினை அடைந்தனர்.

வண்டுகள் மலரைக் குடைந்து தேன் ஆடல் கண்டு இவர்களும் தடாகங்களைக் குடைந்து நீராடும் நினைவுற்றனர் என்பது குறிப்பு. தடம்: அகன்று பெரிதான நீர்நிலை. மடு: ஆழ்ந்து சிறிதான நீர்நிலை. நீராடுங்காலை, மலர்களைப் பறித்து வந்து, ஒருவர் மேல் ஒருவர் இலக்குத் தவறுதல் இன்றி வீசி விளையாடுதல் நீர் விளையாட்டு எனத் தெரிகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. After they reached it and made camp there, the sun too climbed to the height of the sky;
  2. and with the throngs of their women, the kings and the young princes,
  3. to pick soft flowers where bees burrow and dwell, and to bathe,
  4. went to a cool, fragrant grove ringed with clear pools and deep ponds.

What the poem says

The army camps on the bank of the Cōṇai. By the time the sun is high, the kings and princes go with their wives to a cool, fragrant grove surrounded by broad pools and deep ponds. They mean to pick flowers and play in the water.

Seeing bees plunge into the flowers for honey, they too want to plunge into the water. Water-play included throwing picked flowers at one another.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭaintu avaṇ iṟutta piṉṉar, arukkaṉum umparc cērntāṉ,
maṭantaiyar kuḻāṅkaḷōṭu, maṉṉavarum, maintartāmum,
kuṭaintu vaṇṭu uṟaiyum meṉ pūk koytu nīrāṭa, mai tīr
taṭaṅkaḷum maṭuvum cūḻnta taṇ naṟuñ cōlai cārntār.