கம்பராமாயணம் 9645 · யுத்த 32.9

Section யுத்த காண்டம் / 32. வானரர் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பூவாய் வாளிச் செல் எறி காலைப் பரிபொன்ற,
கோவாய் விண்சேர் வெண்கொடி திண் காலொடு கூட,
மாவாய் திண்தேர் மண்டுதலால் நீர், மறிவேலை
நாவாய் மானச் செல்வன காண்மின் நமரங்காள்;

பொருள் · Meaning in Tamil

நமரங்காள்! - நம்மவர்களே!; பூவாய் வாளிச் செல் எறிகாலை - கூரிய முனையை உடைய அம்புகளாம் இடிகள் வீழ்ந்து எறிந்த காலத்து; பரிபொன்ற - குதிரைகள் இறக்க; கோ ஆர் விண்வாய் - சிறப்புமிக்க வானத்திடையே, வெண்கொடி திண்பாயொடு கூட - வெள்ளைக் கொடி திண்ணிய பாயொடு பொருந்த; மாவாய் திண்தேர் மண்டுதலால் - குதிரைகள் பூட்டிய வலிய தேர்கள் இரத்த வெள்ளத்தில் நிற்பதால்; நீர்மறி வேலை நாவாய்மானச் செல்வன - நீர் நிறைந்த கடலிலே மரக்கலங்கள் போலச் செல்வனவற்றை, காண்மின் - பாருங்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'When the thunderbolts of flower-tipped arrows struck and the horses died,
  2. the strong chariots, with their white banners joined to strong sails up in the glorious sky,
  3. standing in the flood, see how they move
  4. like ships upon the rolling sea, our people.'

What the poem says

The war chariots now stand in the flood of blood. Their horses were killed by Irāmaṉ's arrows, which struck like thunderbolts.

With their white banners streaming high against the sky like sails, the chariots look like ships riding on a rolling sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pū vāy vāḷic cel eṟi kālaip pari poṉṟa,
kō ār viṇvāy veṇ koṭi tiṇ pāyoṭu kūṭa,
mā vāy tiṇ tēr maṇṭutalāl nīr, maṟi vēlai
nāvāy māṉac celvaṉa kāṇmiṉ namaraṅkāḷ;