கம்பராமாயணம் 9646 · யுத்த 32.10

Section யுத்த காண்டம் / 32. வானரர் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஒழுகிப் பாயும் மும்மத வேழம் உயிரோடும்
எழுகிற்கில்லாச் செம்புனல் வெள்ளத்திடை ஈர்ப்ப,
பழகிற்று இல்லாப் பல்திரை தூங்கும் படர்வேலை
முழுகித் தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை காணீர்.

பொருள் · Meaning in Tamil

ஒழுகிப் பாயும் மும்மதவேழம் - தரையில் ஒழுகிப் பாயும் கன்னம், கபோலம், பீசம் என்னும் உறுப்புகளில் மதநீர் கொண்ட யானைகள்; உயிரோடும் எழுகிற்கில்லா - உயிரோடிருந்தும் எழமுடியாத; செம்புனல் வெள்ளத்திடை இற்ற - இரத்த வெள்ளத்தில் தனித்தனி ஆயின; பழகிற்கில்லா - பழகுதல் இல்லாத; பல்திரை தூங்கும் - பல அலைகள் மடங்கி; படர்வேலை - பரவுகின்ற கடலில்; முழுகித் தோன்றும் - மூழ்கி வெளிப்படும்; மீன் அரசு ஒக்கும் - மீன் அரசு போலிருக்கும்; முறை நோக்கீர் - முறையைப் பாருங்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The elephants with triple rut flowing and gushing, unable to rise
  2. even while still alive, lie broken in the flood of red water;
  3. see how they are like the king of fish that plunges and appears
  4. in the spreading sea where many unfamiliar waves hang.'

What the poem says

Vīṭaṇaṉ points out the war elephants. Musth flows from the three places on their heads where it is said to appear. They lie broken in the red flood, some still alive but unable to get up.

As they sink and surface in the blood, they look like whales, the kings of fish, diving and rising in a wide sea full of strange waves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'oḻukip pāyum mum mata vēḻam uyirōṭum
eḻukiṟkillāc cempuṉal veḷḷattiṭai iṟṟa;
paḻakiṟkillāp pal tirai tūṅkum paṭar vēlai
muḻukit tōṉṟum mīṉ aracu okkum muṟai nōkkīr!