கம்பராமாயணம் 9651 · யுத்த 32.15

Section யுத்த காண்டம் / 32. வானரர் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மின்னும் ஓடை ஆடல் வயப் போர் மிடல் வேழக்
கன்னம் மூலத்து உற்றன வெண்சாமரை காணீர்;
மன்னும் மாநீர்த் தாமரை மீதின் மகிழ்வு எய்தி
அன்னம் மெல்லத் துஞ்சுவ ஒக்கின்றன வம்மா!

பொருள் · Meaning in Tamil

மின்னும் ஓடை ஆடல் - மின்னுகின்ற நெற்றிப்பட்டத்தையும் ஆடலையும் உடைய; வயப்போர் மிடல் வேழக்கன்னம் மூலத்துற்றன - வெற்றி பொருந்திய போரிலே வலிமை மிக்க யானைகளின் காதின் அடிப்பக்கத்திலே அமைந்துள்ள; வெண்சாமரை காணீர் - வெண்சாமரைகளைப் பாரீர்; மன்னும் மாநீர்த் தாமரைமானும் - நிலைபெற்ற மிகுந்த நீரில் உள்ள தாமரை மலரை ஒத்த; வதனத்த - (வீரரின்) முகத்தின்மீது படிந்த அவைகள்; அன்னம் மெல்லத் துஞ்சுவ ஒக்கின்றவை காணீர் - அன்னப்பறவைகள் அம்மலர்களில் மெல்லத் தூங்குகின்றவை ஒக்கும். அவற்றைப் பாரீர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'See the white fly-whisks set at the roots of the ears of the mighty elephants,
  2. victorious in war, with gleaming forehead-plates, that swayed as they moved;
  3. see how they look like swans gently sleeping
  4. on faces that are like lotuses in deep, abiding water.'

What the poem says

War elephants wore white fly-whisks of yak tail fixed at the base of their ears as ornaments. After the slaughter, many of these whisks have fallen onto the faces of dead warriors.

Those faces look like lotuses on a deep lake, and the white whisks resting on them look like swans sleeping peacefully on the lotus blooms.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1miṉṉum ōṭai āṭal vayap pōr miṭal vēḻak
kaṉṉam mūlattu uṟṟaṉa veṇ cāmarai kāṇīr;
maṉṉum mā nīrt tāmarai māṉum vataṉatta
aṉṉam mellat tuñcuva okkiṉṟavai kāṇīr.