கம்பராமாயணம் 9658 · யுத்த 32.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வான் நனைய - வானம் நனையவும், மண் நனைய வளர்ந்து எழுந்த - மண்நனையவும் மிக எழுந்த; கொழுங் குருதி மகர வேலை தான் நனைவுற்று - செழுமையான இரத்தத்தில் மகர மீன்களுடைய கடலும் நனைய; எழும் பறவைச் சிறை தெளித்த - வானில் எழும் பறவைகளின் சிறகுகளில் தெளித்த; புது மழையின் துள்ளி தாங்கி - புதிய மழைத் துளிகளைத் தாங்கியிருப்பதால்; மீன் அனைய நறும் போதும் - விண்மீன் போன்ற வெள்ளிய நறுமலர்களும்; விரை அரும்பும் சிறைவண்டும் - மணமிக்க அரும்பும் கருஞ்சிறகு வண்டுகளும்; வேறு நிறம் எய்தி - வேற்று நிறம் பெற்று; கானகமும் கடிபொழிலும் முறிஈன்ற போன்று - காடும் மணமிக்க சோலையும் செந்தளிர்களைத் தளிர்த்தது போன்று; ஒளிர்வ காண்மின் காண்மின் - விளங்குவதைப் பாருங்கள்! பாருங்கள்!
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Drenching the sky, drenching the earth, the thick blood that swelled and rose up, so that the sea of makaras itself was drenched,
- sprinkled from the wings of rising birds like drops of fresh rain, and bearing those drops,
- the fragrant flowers like stars, the scented buds and the winged bees took on another colour,
- so that forest and fragrant grove shine as if they had put forth red young leaves; see! see!'
What the poem says
The blood of the battle has risen so high that it has soaked the sky, the earth and even the ocean. Birds flying up from the field shake drops of it from their wings like a fresh shower of rain.
Falling on the nearby woods, those red drops stain the white star-like flowers, the fragrant buds and the bees. The whole forest and its gardens now glow as though they had put out fresh red shoots.