கம்பராமாயணம் 9668 · யுத்த 32.32

Section யுத்த காண்டம் / 32. வானரர் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வானவர்க்கு இறைவன் திறை தந்தன
ஆனவர்க்கம் ஓர் ஆயிர கோடியால்;
தானவர்க்கு இறைவன் திறை தந்தன
ஏனைவர்க்கம் கணக்கு இல இவ்வெலாம்.

பொருள் · Meaning in Tamil

வானவர்க்கு இறைவன் திறைதந்தன - இந்திரனால் (இராவணனுக்கு) கப்பப்பொருள்களாகத் தந்தன; ஆன வர்க்கம் ஓர் ஆயிரகோடி - ஆகிய கூட்டம் ஓர் ஆயிரகோடியாகும்; தானவர்க்கு இறைவன் - தானவர்க்குத் தலைவன்; திறை தந்தன - கப்பமாக அளித்தவை; ஏனை வர்க்கம் - மற்றோர் இனமாம்; இவ்எலாம் கணக்கு இல - இவற்றிற்குக் கணக்கு இல்லை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Those which the lord of the gods gave as tribute
  2. made up a host of a thousand crores;
  3. those the lord of the Tāṉavas gave as tribute
  4. are another breed; all these are past counting.'

What the poem says

Some of the dead elephants came to Irāvaṇaṉ as tribute from Indra, lord of the gods, after Irāvaṇaṉ defeated him, and these number a thousand crores.

Others are a different breed, paid as tribute by the king of the Tāṉavas. Taken all together they are beyond counting. The list shows how far Irāvaṇaṉ's power once reached.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉavarkku iṟaivaṉ tiṟai tantaṉa
āṉa varkkam ōr āyira kōṭiyum;
tāṉavarkku iṟaivaṉ tiṟai tantaṉa
ēṉai varkkam kaṇakku ila iv elām.