கம்பராமாயணம் 9677 · யுத்த 33.5

Section யுத்த காண்டம் / 33. இராவணன் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நான நெய் நன்கு உரைத்து நறும்புனல்
ஆன கோது அற ஆட்டி அமுது ஒடு
பானம் ஊட்டி சயனம் பரப்புவான்
வான நாட்டியர் யாவரும் வந்தனர்.

பொருள் · Meaning in Tamil

நானம் நெய் நன்கு உரைத்து - புழுகு நெய்யை நன்கு தேய்த்து; நறும்புனல் ஆன கோது அற ஆட்டி - நறுமண நீரால் அழுக்குப் போக நீராட்டி; அமுதொடும் பானம் ஊட்டி - அமுதாகிய சோறொடு பருகும் நீரையும் அளித்து; சயனம் பரப்புவான் - படுக்கைகளைப் பரப்புவதற்காக; வானநாடியர் யாவரும் வந்தனர் - வானுலகப் பெண்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Rubbing them well with musk-oil, bathing them
  2. in fragrant water until every stain was gone, feeding them nectar
  3. and drink, and in order to spread their beds,
  4. all the women of the heavenly land came.

What the poem says

The celestial women of heaven arrive to wait on the demon warriors. They rub them with musk-scented oil and bathe them in perfumed water until every trace of grime is gone.

They serve them food as sweet as nectar and give them drink, and they make ready their beds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāṉam ney naṉku uraittu naṟum puṉal
āṉa kōtu aṟa āṭṭi amutoṭum
pāṉam ūṭṭi cayaṉam parappuvāṉ
vāṉa nāṭiyar yāvarum vantaṉar.