கம்பராமாயணம் 9678 · யுத்த 33.6

Section யுத்த காண்டம் / 33. இராவணன் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பாடுவார்கள்; பயில்நடம் பாவகத்து
ஆடுவார்கள்; அமளியில் இன்புறக்
கூடுவார்முதல் யாரும் குறைவு அறத்
தேடினார் என பண்ணையில் சேர்ந்தனர்.

பொருள் · Meaning in Tamil

பாடுவார்கள் - இன்னிசை பாடுவார்களும்; பயில் நடம் பாவகத்து ஆடுவார்கள் - பயின்ற நாட்டியத்தை பாவனையோடு ஆடுவார்களும்; அமளியில் இன்புறக் கூடுவார்கள் - படுக்கையில் இன்பம் பொருந்த அணைவார்கள்; முதலும் குறைவு அற - முதற்பொருள் முதல் எவையும் குறைவின்றி; தேடினான் என - தேடிக் கொண்டவன் போன்று; பண்ணையின் சேர்ந்தது - மகளிர் கூட்டத்தால் சேர்ந்தது ஆம்.

தாம் புனைந்த நாடக மாந்தவராகவே ஆகி நடிப்பது பாவகம் ஆகும். பாடல், ஆடல், கூடல் என்பவற்றைத் தாமாக முயற்சி செய்யாமல் அரக்க வீரர்கள் இராவணன் ஆணையில் எளிதாகப் பெற்றனர் என்பதாம். பண்ணை - மகளிர் கூட்டம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those who sing; those who dance the dances they have learned, with expression;
  2. those who join with them in delight on the couch; all of these, beginning with the first,
  3. without any lack, as though he had sought them out,
  4. gathered in a throng.

What the poem says

Every pleasure is laid on for the demons. There are women who sing, women who dance the dances they have studied with full dramatic expression, and women who share their beds.

It is as if Irāvaṇaṉ had personally searched out every delight and left nothing missing. The demon warriors receive all this at his command without having to make any effort of their own.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāṭuvārkaḷ; payil naṭam pāvakattu
āṭuvārkaḷ; amaḷiyil iṉpuṟak
kūṭuvārkaḷ mutalum kuṟaivu aṟat
tēṭiṉāṉ eṉa paṇṇaiyiṉ cērntatāl.