கம்பராமாயணம் 9681 · யுத்த 33.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1நடுங்குகின்ற உடலினர் நா உலர்ந்து
ஒடுங்குகின்ற உயிர்ப்பினர் உள் அழிந்து
இடுங்குகின்ற விழியினர் ஏங்கினார்
பிடுங்குகின்ற மொழியினர் பேசுவார்.
பொருள் · Meaning in Tamil
நடுங்குகின்ற உடலினர் - நடுங்கும் உடல் உடையவராய், நாஉலர்ந்து - நாக்கு வறந்து; ஒடுங்குகின்ற உயிர்ப்பினர் - சோர்கின்ற மூச்சுடையவராய்; உள் அழிந்து - உள்ளம் அழிந்து; இடுங்குகின்ற விழியினர் - சுருங்கிய கண்ணினராய், ஏங்கினார் - ஏங்கி நின்றவராய்; பிடுங்குகின்ற மொழியினர் பேசுவார் - சொல் தடுமாறு சொற்களை வலிதிற் பிடுங்குபவர் போல் கூறினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With trembling bodies, their tongues parched,
- their breath failing, their hearts destroyed,
- their eyes shrunken, they stood sighing,
- and spoke with words they had to wrench out.
What the poem says
The messengers are terrified of how Irāvaṇaṉ will react to their news. Their bodies shake, their tongues are dry and their breath comes faintly.
Their hearts sink and their eyes are narrowed with fear. They stand there sighing, and when they finally speak they have to force out the words one by one.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṭuṅkukiṉṟa uṭaliṉar nā ularntu
oṭuṅkukiṉṟa uyirppiṉar uḷ aḻintu
iṭuṅkukiṉṟa viḻiyiṉar ēṅkiṉār
piṭuṅkukiṉṟa uraiyiṉar pēcuvār.