கம்பராமாயணம் 9683 · யுத்த 33.11

Section யுத்த காண்டம் / 33. இராவணன் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘வலிக்கடன் வான் உளோரைக் கொண்டு, நீவகுத்த போகம்,
“கலிக்கடன் அளிப்பல் “ என்று நிருதர்க்குக் கருதினாயேல்,
பலிக்கடன் அளிக்கற்பாலை அல்லது, உன்குலத்தின் பாலோர்
ஒலிக்கடல் உலகத்து இல்லை; ஊர் உளார் உளமே உள்ளார்.

பொருள் · Meaning in Tamil

வலிக்கடன் வான் உளோரைக் கொண்டு - கட்டளையாக கடமையை செய்யும் விண்ணுளோரைக் கொண்டு; நீ வகுத்த போகம் - நீ உண்டாக்கிய போகத்தை; கலிக்கடன் அளிப்பல் என்று - மகிழ்ச்சியின் முறைமையால் அளிப்பேன் என; நிருதர்க்குக் கருதினாயேல் - அரக்கர்க்கு அளிக்க எண்ணினால், பலிக்கடன் அளிக்கற்பாலை அல்லது - இறந்தவர்க்குச் செய்யும் பலிக்கடனளிக்கத் தக்காய் என்பதல்லது; உன் குலத்தின் பாலோர் - உன் குலத்தினைச் சேர்ந்தவர்கள்; ஒலிக்கடல் உலகத்து இல்லை - ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த உலகத்தில் யாரும் இல்லை; ஊர் உளார் உளரே உள்ளார் - ஊரில் உள்ளவர்கள்தாம் உயிருள்ளவராக இருக்கின்றனர் (எனத் தூதுவர் கூறினர்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If you meant to give the rākṣasas the pleasures you arranged by forcing the gods to serve,
  2. saying "I will grant them a joyful feast,"
  3. you are now fit only to offer them funeral oblations; of your own clan
  4. none remain in this world ringed by the roaring sea; only those inside the city are still alive.'

What the poem says

The messengers continue. Irāvaṇaṉ had planned to reward his demons with luxuries wrung from the gods he had enslaved. Now the only offering he can make them is the rite for the dead.

Their point is that his whole kin and army in the field are gone; only those who stayed inside Ilaṅkai are left.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘valik kaṭaṉ vāṉ uḷōraik koṇṭu, nī vakutta pōkam,
“kalik kaṭaṉ aḷippal “ eṉṟu nirutarkkuk karutiṉāyēl,
palik kaṭaṉ aḷikkaṟpālai allatu, uṉ kulattiṉpālōr
olik kaṭal ulakattu illai; ūr uḷār uḷarē uḷḷār.