கம்பராமாயணம் 9685 · யுத்த 33.13

Section யுத்த காண்டம் / 33. இராவணன் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார்
உன்னினும் உலப்பு இலாதார்; உவரியின் மணலின் மிக்கார்;
“பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் “ என்று பேசும்
இந்நிலை பொய்ம்மை; மெய்ம்மை விளம்புவீர் விரைவின் என்றான்!

பொருள் · Meaning in Tamil

என்னினும் வலியர் ஆன இராக்கதர் - என்னைவிட வலிமை கொண்டவரான மூலப்படை வீரர்; யாண்டும் வீயார் - எப்போதும் எங்கும் அழியாதவர்கள்; உன்னினும் உவப்பு இலாதார் - நினைப்பினால் கொல்வதானாலும் கொல்ல முடியாதவர்கள்; உவரியின் மணலின் நீள்வார் - கடல் மணலைக் காட்டிலும் எண்ணிக்கை மிக்கவர்; பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் - பின்பு காண ஒருவருமின்றி இறந்தனர்; என்று பேசும் இந்நிலை இதுவோ - என நீர் கூறும் இந்நிலை இதுவோ; பொய்ம்மை விளிம்பினிர் போலும் என்றான் - பொய் சொன்னீர் என்று கூறினான் இராவணன்;

உண்மை பேசியதாக உங்கள் நினைப்போ” என்றான் இராவணன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The rākṣasas, mightier even than I, never perish anywhere;
  2. even by thought they cannot be destroyed; they outnumber the sand of the sea;
  3. this tale you tell, that they died leaving not one name behind,
  4. is a lie; tell me the truth, and quickly,' he said.

What the poem says

Irāvaṇaṉ refuses to believe the messengers. The warriors of the reserve army, he insists, were stronger than himself, beyond destruction even by a wish, and more numerous than grains of sand on the shore.

That all of them could have died without one survivor seems impossible to him, so he accuses the messengers of lying and demands the truth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṉiṉum valiyar āṉa irākkatar yāṇṭum vīyār
uṉṉiṉum ulappu ilātār; uvariyiṉ maṇaliṉ nīḷvār;
“piṉ oru peyarum iṉṟi māṇṭaṉar “ eṉṟu pēcum
innilai poymmai; meymmai viḷampuvīr viraiviṉ eṉṟāṉ!