கம்பராமாயணம் 9688 · யுத்த 33.16

Section யுத்த காண்டம் / 33. இராவணன் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘ஒன்று இடில் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத
நின்றன எல்லாம் பெய்தால், உடன் நுங்கும் நெருப்பும் காண்டும்;
குன்றொடு மரமும், புல்லும். பல்லுயிர்க் குழுவுங் கொல்லும்
வன் திறல் காற்றும் காண்டும்; வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ?

பொருள் · Meaning in Tamil

ஒன்று இடின் அதனை உண்ணும் - ஏற்ற ஒருணவை இட்டால் அதனை உண்கின்ற; உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத - உலக உயிர்களுக்குப் பொருந்தாத; நின்றன எல்லாம் பெய்தால் - எல்லாவற்றையும் இட்டால்; உடன்நுங்கு நெருப்பும் காண்டும் - ஒருங்கே உண்ணும் தீயைக் காண்கின்றோம், குன்றொடு மரனும் புல்லும் - மலையொடு மரமும் புல்லும் முதலிய; பல்லுயிர் கொல்லும் - பல உயிர்களைக் கொல்லும் ஆற்றல் உள்ள; வன்திறல் காற்றும் காண்டும் - வலிமை கொண்ட காற்றையும் காண்கின்றோம்; வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ - (ஆதலால்) வலிமைக்கு ஒரு கட்டுப்பாடு உண்டா? (இல்லை).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Living beings of the world eat a single thing when it is set before them, but if one heaps up
  2. everything that exists, even what does not suit them, we see fire swallow it all at once;
  3. we see too the fierce wind that kills hills and trees and grass
  4. and the hosts of many creatures; is there any limit to strength?'

What the poem says

Māliyavāṉ illustrates his point with fire and wind. A creature eats only the one suitable food placed before it, but fire consumes anything and everything heaped on it at once.

Likewise the storm-wind flattens mountains, trees, grass and countless living things together. Power has no fixed limit, so it should not surprise Irāvaṇaṉ that one man destroyed a whole army.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘oṉṟu iṭiṉ ataṉai uṇṇum ulakattiṉ uyirkku oṉṟāta
niṉṟaṉa ellām peytāl, uṭaṉ nuṅku neruppum kāṇṭum;
kuṉṟoṭu maraṉum, pullum. pal uyirk kuḻuvum kollum
vaṉ tiṟal kāṟṟum kāṇṭum; valikku oru varampum uṇṭō?