கம்பராமாயணம் 9691 · யுத்த 33.19

Section யுத்த காண்டம் / 33. இராவணன் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆண்டு அது கேட்டு நின்ற தூதுவர், ‘ஐய! மெய்யே
மீண்டது, அவ் இளவல் ஆவி, மாருதி மருந்து மெய்யில்
தீண்டவும் தாழ்த்தது இல்லை; யாரும் அச் செங்கணானைப்
பூண்டனர் தழுவிப் புக்கார் காணுதி போதி ‘என்றார்.

பொருள் · Meaning in Tamil

ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர் - அங்கு அதைப் பார்த்து நின்ற தூதுவர்; ஐயா அந்த இளவல் ஆவி - ஐயனே! இராமனின் தம்பியாம் இலக்குவனின் உயிர்; மாருதி மருந்து மெய்யில் தீண்டவும் - அனுமன் கொணர்ந்த மருந்து உடம்பில் பட்டவுடன்; தாழ்ந்தது இல்லை மீண்டது - சிறிதும் தாழ்க்காமல் மீண்டது; அச்செங்கணானை யாரும் பூண்டனர் தழுவிப் புக்கார் - சிவந்த கண்ணுடைய இலக்குவனை எல்லோரும் சூழ்ந்து தழுவிக் கொண்டு சென்றனர்; காணுதி போதி என்றார் - சென்று பார்ப்பாயாக என்று கூறினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The messengers who stood there and saw this said, 'My lord, truly
  2. his life came back, then and there; the moment Māruti's medicine touched his body
  3. it did not delay; everyone embraced that red-eyed one
  4. and held him close as they went in; go and see for yourself,' they said.

What the poem says

The messengers correct Irāvaṇaṉ's hope. Ilakkuvaṉ is not dead: as soon as the herb brought by Aṉumaṉ (Māruti, son of the wind) touched his body, his life returned at once.

The whole camp crowded round and embraced him. The messengers invite the king to go and see it with his own eyes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇṭu atu kaṇṭu niṉṟa tūtuvar, ‘aiya! meyyē
mīṇṭatu, av aḷaviṉ āvi, māruti maruntu meyyil
tīṇṭavum tāḻttatu illai; yārum ac ceṅkaṇāṉaip
pūṇṭaṉar taḻuvip pukkār kāṇuti pōti ‘eṉṟār.