கம்பராமாயணம் 9693 · யுத்த 33.21

Section யுத்த காண்டம் / 33. இராவணன் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கொய்தலைப் பூசற் பட்டோர் குலத்தியர் குவளையோடு
நெய்தலை வென்றவாள் கண் குமுதத்தின் நீர்மை காட்ட
கய்தலை உற்ற பூசல்; கடல் எலாம் நிமிருங் காலைச்
செய்தலை உற்ற ஓசைச் செயலது செவியில் கேட்டான்.

பொருள் · Meaning in Tamil

கொய்தலைப் பூசல் பட்டோர் குலத்தியர் - பகைவரால் கொய்யப்பட்ட (தம் கணவரின் தலையைக் கண்டு துன்புறும் அரக்க மகளிர்; குவளை தோற்று நெய்தலை வென்ற வாள்கண் - கரிய குவளை மலரையும் கரு நெய்தல் மலரையும் வென்ற வாள் போன்ற கண்கள்; குமுதத்தின் நீர்மை காட்ட - அழுது சிவந்ததால் செங்குமுத மலரின் தன்மையைக் காட்ட, கய் தலை உற்ற பூசல் - தம் கையால் தம் தலையில் அடித்துக் கொண்டிருக்கும் அழுகை ஒலி; கடலொடு நிமிருங்காலை செய்தலை உற்ற ஓசைச் செயலதும் - கடல்கள் எல்லாம் பொங்கிய காலத்து எழும் ஓசை செய்யும் தன்மையை; செவியின் கேட்டான் - இராவணன் தன் காதாற் கேட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The women of the clans of those who fell in the battle of severed heads, their sword-bright eyes
  2. that had outdone the kuvaḷai and defeated the neytal now showing the nature of the red kumutam,
  3. raised a wailing as they beat their heads with their hands; a sound like that which rises
  4. when all the seas swell up together, he heard with his own ears.

What the poem says

From the tower Irāvaṇaṉ hears the widows of the slain demons. Their eyes, once dark and lovelier than blue water-lilies (kuvaḷai and neytal), are now red from weeping, like the red kumutam lily.

Beating their heads with their hands, they raise a lament as loud as the roar of all the oceans rising at the end of the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koy talaip pūcal paṭṭōr kulattiyar kuvaḷai tōṟṟu
neytalai veṉṟa vāḷ kaṇ kumutattiṉ nīrmai kāṭṭa
kay talai uṟṟa pūcal; kaṭaloṭu nimirumkālai
ceytalai uṟṟa ōcaic ceyalatum ceviyiṉ kēṭṭāṉ.