கம்பராமாயணம் 9694 · யுத்த 33.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எண்ணும் நீர் கடந்த யானைப் பெரும் பிணம் ஏந்தி - எண்ணும் தன்மையைக் கடந்த யானையின் பெரும் பிணங்களை ஏந்திக் கொண்டு; யாணர் மண்ணின் நீர் அளவும் கல்லி - புதிய ஊற்று நீர் உள்ள அளவும் தோண்டி; நெடுமலை பறித்து - நீண்ட மலைகளைப் புரட்டி; மண்டும் புண்ணின் நீர் ஆறும் - விரைந்து ஓடும் இரத்த ஆறும்; பல்பேய்ப் புதுப்புனல் ஆடும் பொம்மல் - பலபேய்கள் புதிய நீர் எனக்குளிக்கும் பொலிவுடைய; கண்ணின் நீர் ஆறும் - கண்ணில் வடியும் ஆறும்; மாறாக் கருங்கடல் மடுப்பக் கண்டான் - தம் தன்மை மாறாது கரிய கடலில் புகுந்து கலப்பதை இராவணன் பார்த்தான். எண்ணிப் பார்த்துப் பின் அவற்றின் எண்ணிக்கையைக் கண்டு அறிய முடியாத அளவு பெருக்கமுள்ள யானைகள் என்றார் யானைப் பிணம் ஏந்து, ஊற்று நீர் உள்ளளவும் தோண்டிச் சென்று மலைகளைப் புரட்டிய இரத்த ஆறும் கரைகளை இழந்த கண்ணீர் ஆறும் கருங்கடலுள் சேர்ந்தன.
கல்லுதல் - தோண்டுதல், மறித்தல் - புரட்டுதல், பொம்மல் - பொலிவு, மாறா- எதிர் மறைப் பெயரெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Carrying the huge corpses of elephants beyond all counting,
- digging down as deep as the fresh springs of the earth, tearing up tall hills, the rushing
- river of blood from wounds, swollen as many ghouls bathed in it as in fresh floodwater,
- and the river of tears, flowing on unchanged into the dark sea: this he saw.
What the poem says
Irāvaṇaṉ sees two rivers pouring into the black ocean. One is a torrent of blood from the wounds of the slain, so powerful that it carries uncountable elephant carcasses, scours the earth down to the springs and uproots hills; ghouls frolic in it as if in a fresh flood.
The other is the river of tears shed by the grieving women. Both flow into the sea without losing their force.