கம்பராமாயணம் 9696 · யுத்த 33.24

Section யுத்த காண்டம் / 33. இராவணன் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குமிழி நீரோடும் - குமிழி இட்டுப் பெருகும் கண்ணீரோடும்; சோரிக்கனலொடும் - சின நெருப்புக் கக்கும் இரத்தத்தோடும்; கொழிக்கும் கண்ணான் - பெருகும் கண்களையுடைய இராவணன்; தமிழ்நெறி வழக்கம் அன்ன - தமிழ்க்குரிய அகப்பொருள் கூறும் பெருகிய வழக்கம் போன்று; தனிச்சிலை வழக்கில் சாய்ந்தார் - ஒப்பற்ற வில் விடுத்த அம்பினால் இறந்தவர்களின்; அமிழ் பெருங்குருதி வெள்ளம் ஆற்றுவாய் - அமிழும் மிகுந்த இரத்த வெள்ளத்தை கடலில் ஆறு கலக்கும் சங்கமுமாகிய வாயினால்; முகத்தின் தேக்கி - முகத்திலே தேக்கி வைத்து; உமிழ்வதை ஒக்கும் - துப்புவதைப் போன்றிருக்கும், வேலை ஓதம் வந்து உடற்றக் கண்டான் - (இரத்தம் கலந்த) கடலின் அலைகள் வந்து போர்க்களத்தில் மோதிடப் பார்த்தான்.

தமிழ் நெறி வழக்கம் என்பது தமிழின் பொருளிலக்கணத்தில் காணப் பெறும் அகப் பொருள் நெறியாகும். அது களவு, கற்பு என இருவகைப்படும். இதில் களவு நெறி பலவகையாக விரிந்து பரந்து நிற்றல் போல் இராமனின் அம்பும், அரக்கர் மீது ஒன்று பத்தாக நூறாகப் பரந்து பாய்ந்து செல்லும் எனப் புதிய உவமையைப் படைத்துள்ளார். தமிழ் நெறி வழக்கம் உலகம் அளாவியது; இராமன் வில்லிடும் அம்பும் உலகளாவியது எனினும் ஆம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He whose eyes streamed with bubbling tears and with fire-hot blood
  2. saw the tide of the sea come surging in, as if, from those who fell by the peerless bow,
  3. whose usage spreads like the way of Tamil, the great flood of sinking blood
  4. were dammed up in the river-mouth and spat back out again.

What the poem says

Irāvaṇaṉ weeps tears mixed with blood-red fire. He sees the sea's tide crash back onto the battlefield, as though the ocean had taken the flood of blood pouring from the river-mouths into its mouth and spat it out again.

The poet compares the spread of Irāmaṉ's arrows to 'the way of Tamil', the love-poetry tradition of Tamil grammar (akam) with its many branching conventions: just as that tradition spreads wide, one arrow from his bow multiplies into ten and a hundred among the demons. Alternatively, both are said to reach across the whole world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kumiḻi nīrōṭum, cōrik, kaṉaloṭum, koḻikkum kaṇṇāṉ,
tamiḻ neṟi vaḻakkam aṉṉa taṉic cilai vaḻakkil cāyntār.
amiḻ peruṅ kuruti veḷḷam āṟṟu vāymukattiṉ tēkki,
umiḻvatē okkum vēlai ōtam vantu uṭaṟṟak kaṇṭāṉ.