கம்பராமாயணம் 9698 · யுத்த 33.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விண்பிளந்து ஒல்க ஆர்க்கும் - வானுலகம் பிளந்து அசையுமாறு ஆரவாரிக்கும், வானரர் வீக்கம் கண்டான் - வானர வீரர்களின் பெருக்கத்தைப் பார்த்தான்; மண்பிளந்து அழுந்த - மண்உலகம் பிளவுற்று அழுந்துமாறு; ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான் - ஆடுகின்ற தலையற்ற உடல்களின் கூட்டத்தைப் பார்த்தான்; கண் பிளந்து அகல நோக்கும் - கண்களை அகலமாகத் திறந்து போர்க்களத்தைப் பார்க்கும்; வானவர் களிப்பும் கண்டான் - தேவர்களின் மகிழ்ச்சியையும் பார்த்தான்; புண் பிளந்தனைய நெஞ்சன் - உடலிலுள்ள புண் பிளந்தது போன்ற துன்பமிக்க உள்ளமுடைய இராவணன்; கோபுரத்து இழிந்து போனான் - கோபுரத்திலிருந்து இறங்கி வந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He saw the swelling host of monkeys roaring till the sky split and shook;
- he saw the throng of headless trunks dancing till the earth split and sank;
- he saw the delight of the gods gazing with eyes split wide open;
- with a heart like a wound torn open, he came down from the tower.
What the poem says
The tower scene ends. Irāvaṇaṉ sees the monkey army roaring in triumph, headless bodies (kavantam) still dancing on the battlefield, and the gods watching wide-eyed with joy.
The verse repeats the word 'split' in each line: the sky, the earth, the gods' eyes, and finally Irāvaṇaṉ's heart, which feels like a wound ripped open. He climbs down from the tower.