கம்பராமாயணம் 9701 · யுத்த 34.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1எற்றிய முரசங் கேளா, ஏழ் இரு நூறு கோடி
கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது; கொடித்திண் தேரும்
சுற்றுறு துளைக் கைம்மாவும், துரகமும், பிறவும் தொக்க;
வற்றிய வேலை என்ன இலங்கை ஊர் வறளிற்று ஆக.
பொருள் · Meaning in Tamil
ஏற்றின முரசினோடும் - முழக்கிய முரசத்துடன்; ஏழ்இரு நூறுகோடி - பதினான்கு நூறுகோடி; கொற்றவாள் நிருதர் சேனை - வெற்றி பொருந்திய அரக்கர் படை, குழீஇயது - திரண்டது; வற்றிய வேலை என்ன - நீர்வறண்டு போன கடல் போல; இலங்கையூர் வறளிற்றாக - இலங்கை நகர் வறுமையுடையதாக ஆயிற்று; கொடித்திண் தேரும் - கொடிகள் கட்டிய தேரும்; சுற்றுறு துளைக்கைம்மாவும் - சுற்றிச் சுழலும் துளைக் கையையுடைய யானையும்; துரகமும் பிறவும் தொக்க - குதிரையும் பிற படை யாவையும் சேர்ந்த;
ஆங்கிலம் · English translationAI
Translation
- At the beating of the drum, fourteen hundred crore
- of the rākṣasa army with conquering swords assembled; strong chariots with banners,
- elephants with coiling hollow trunks, horses and the rest gathered,
- so that the city of Ilaṅkai was left empty, like a sea run dry.
What the poem says
At the sound of the drum, a fresh army of fourteen hundred crore demons gathers, with bannered chariots, elephants and horses.
So many leave the city that Ilaṅkai is drained, like an ocean whose water has dried up.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṟṟiṉa muraciṉōṭum ēḻ iru nūṟu kōṭi
koṟṟa vāḷ nirutar cēṉai kuḻīiyatu; koṭit tiṇ tērum
cuṟṟuṟu tuḷaik kaim māvum, turakamum, piṟavum tokka;
vaṟṟiya vēlai eṉṉa ilaṅkai ūr vaṟaḷiṟṟu āka.