கம்பராமாயணம் 9706 · யுத்த 34.7

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மழைக் குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி
இழைத்து எடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து;
முழைக் கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ
தழைக்கும் மின் ஒளிப் பொன்மலர்ச் சதங்கையும் சாத்தி;

பொருள் · Meaning in Tamil

மழைக் குலத்தொடு - மேகக் கூட்டத்தின் உறையும்; வான்உரும் ஏறு எல்லாம் வாரி - மேலான இடிகள் எல்லாவற்றையும் வாரி; இழைத் தொடுத்தன அனைய - செவ்விய முறையில் தொகுத்தமைத்தது போன்ற; வாள் உடை மணி ஆர்த்து - வாளையும் உடையையும், மணியையும் கட்டி; முழைகடைந்த வல் அரிஇனம் - குகையில் உறங்கும் வலிய சிங்கக் கூட்டம்; முழங்குவ போல்வ - முழங்குவதைப் போன்றன; தழைக்கும் மின்ஒளிப் பொன்மலர்ச் சதங்கையும் சாத்தி - மிகுகின்ற மின்னல் போன்ற ஒளியுடைய பொன்மலர் போன்ற சதங்கைகளையும் அணிந்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Tying on a sword-belt of bells, as though all the clouds together with the thunderbolts of the sky
  2. had been gathered up and strung on a cord;
  3. and putting on golden flower-shaped anklet-bells, bright with flourishing lightning,
  4. that sounded like a pride of strong lions roaring in their caves;

What the poem says

Irāvaṇaṉ fastens on a belt hung with bells whose clamour is like all the storm clouds and thunderbolts of the sky gathered together and threaded on a string.

He also puts on golden bells shaped like flowers, flashing like lightning, whose ringing sounds like lions roaring in their mountain caves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maḻaik kulattoṭu vāṉ urum ēṟu elām vāri
iḻait toṭuttaṉa aṉaiya vāḷ uṭai maṇi ārttu;
muḻaik kiṭanta val ari iṉam muḻaṅkuva pōlva
taḻaikkum miṉ oḷip poṉ malarc cataṅkaiyum cātti;