கம்பராமாயணம் 9711 · யுத்த 34.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1வேலைவாய் வந்து வெய்யவர் அனைவரும் விடியும்
காலை உற்றுளர் ஆம் எனக் கதிர்க் குலம் காலும்
மாலை பத்தின்மேல், மதியம் முன் நாள் இடைப் பலவாய்
ஏல முற்றிய அனைய முத்தக் குடை இமைப்ப;
பொருள் · Meaning in Tamil
வேலைவாய் வந்து - கடலிடத்து; வெய்யவர் அனைவரும் - கதிரவர் அனைவரும்; விடியும் காலை உற்றனராம் என - விடியும் காலத்தில் ஒன்றாக வந்து சேர்ந்தனர் எனும்படி; கதிர்க்குலம் காலும் - ஒளிக்கற்றைகளை உமிழ்கின்ற; மாலைபத்தின்மேல் - முடிவரிசை பத்தின்மேல்; மதியம் முன்னாளிடை - சந்திரன் முன் நாளினில்; பலவாம் ஏல முற்றிய அனைய - பலவடிவம் பொருந்த முற்றியதற்கு ஒப்ப; முத்தக் குடை இமைப்ப - முத்துக்கள் தொங்கும் வெண்கொற்றக் குடை விளங்கவும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if all the suns had come up out of the sea and arrived together
- at daybreak, above the ten rows of crowns pouring out streams of rays,
- the pearl umbrellas glittered, like moons of former days
- grown full in many forms;
What the poem says
Irāvaṇaṉ's ten crowned heads flash with light as though every sun had risen from the ocean together at dawn.
Above them gleam white umbrellas hung with pearls, the royal parasols of a king, like many full moons shining at once.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēlaivāy vantu veyyavar aṉaivarum viṭiyum
kālai uṟṟaṉar ām eṉak katirk kulam kālum
mālai pattiṉmēl, matiyam muṉ nāḷiṭaip palavāy
ēla muṟṟiya aṉaiya muttak kuṭai imaippa;