கம்பராமாயணம் 9718 · யுத்த 34.19

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆயிரம் பரி அமுதொடு வந்தவும், அருக்கன்
பாய் வயப் பசுங் குதிரையின் வழியவும், படர்நீர்
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின், வன்காற்றின்
நாயகற்கு வந்து உதித்தவும், பூண்டது நலத்தால்.

பொருள் · Meaning in Tamil

அமுதொடு வந்தவும் - பாற்கடலில் அமுதத்தோடு பிறந்தனவும்; அருக்கன் பாய்வயப் பசுங் குதிரையின் வழியவும் - சூரியன் குதிரைகளின் மரபில் தோன்றியவும்; படர்நீர் வாய் மடுக்கும் மாவடவையின் வயிற்றின் - பரவிய நீர் எங்கும் பரவியுள்ள வடவாமுகாக்கினி வயிற்றிலே; வன்காற்றின் நாயகற்கு வந்துதித்தவும் - கொடிய காற்றுக் கடவுளாம் வாயு தேவனுக்குத் தோன்றியனவுமாகிய; ஆயிரம்பரி நலத்தின் பூண்டது - ஆயிரம் குதிரைகள் அழகாக கட்டப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A thousand horses, some that rose with the nectar, some of the line
  2. of the sun's leaping, strong green steeds, and some born to the lord of the mighty wind
  3. from the womb of the great submarine mare that drinks the spreading waters,
  4. were finely yoked to it.

What the poem says

Though the chariot can move without horses, a thousand splendid steeds are harnessed to it. Some were born from the Ocean of Milk along with the nectar of immortality; some descend from the green horses that draw the sun's chariot.

Others were born to Vāyu, the wind god, from Vaṭavai, the fiery mare-headed being beneath the ocean that drinks up its waters.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiram pari amutoṭu vantavum, arukkaṉ
pāy vayap pacuṅ kutiraiyiṉ vaḻiyavum, paṭar nīr
vāy maṭukkum mā vaṭavaiyiṉ vayiṟṟiṉ, vaṉ kāṟṟiṉ
nāyakaṟku vantu utittavum, pūṇṭatu nalattiṉ.