கம்பராமாயணம் 9721 · யுத்த 34.22

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முனைவர் வானவர் முதலினர், அண்டத்து முதல்வர்
எனைவர் அன்னவர் ஈந்தவும், இகலில் இட்டனவும்,
வினையின் வெய்யன படைக்கலம், வேலை என்று இசைக்கும்
சுனையின் நுண் மணல் தொகையன சுமந்தது, தொக்க.

பொருள் · Meaning in Tamil

முனைவர் வானவர் முதலினர் - முனிவரும், தேவரும் முதலானவரும்; அண்டத்து முதல்வர்- உலகில் முதன்மை நிலை பெற்றவரும்; எனைவர் ஈந்தவும் - எப்படிப் பட்டவரும் கொடுத்திட்டனவும்; இகலினில் இட்டவும் - போரில் தோற்றுக் கொடுத்திட்டனவும்; இயம்பா வினையின் - சொல்ல முடியாத கொடிய போர்ச்செயலின்; வெய்யன படைக்கலம் - கொடியனவாம் படைக்கருவிகள்; வேலை என்று இசைக்கும் - வேலை எனக் கூறப்பெறும்; சுனையின் நுண்மணல் தொகையன - நீர்ச்சுனையிலுள்ள மணலின் தொகையை உடையவாகி; தொக்க சுமந்தது - திரண்டவற்றைச் சுமந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Weapons given by sages, gods and the rest, by the lords of the universe,
  2. by all of them, and weapons left behind by those defeated in battle,
  3. fierce in deeds beyond telling, as many as the fine sand of the pool
  4. they call the ocean, gathered together: these it carried.

What the poem says

The chariot is loaded with countless weapons. Some were presented to Irāvaṇaṉ by sages, gods and the great lords of the cosmos; others were abandoned by enemies he defeated.

They are as numerous as the grains of sand in the sea, which the poet playfully calls a mere 'pool'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṉaivar vāṉavar mutaliṉar, aṇṭattu mutalvar
eṉaivar īntavum, ikaliṉil iṭṭavum, iyampā
viṉaiyiṉ veyyaṉa paṭaikkalam, vēlai eṉṟu icaikkum
cuṉaiyiṉ nuṇ maṇal tokaiyaṉa cumantatu, tokka.