கம்பராமாயணம் 9725 · யுத்த 34.26

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘மன்றல் அம்குழல் சனகி தன் மலர்க் கையால் வயிறு
கொன்று, அலந்தலைக் கொடு நெடுந் துயரிடைக் குளித்தல்;
அன்று இது என்றிடின், மயன்மகள் அத்தொழில் உறுதல்;
இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென், தலைப்படின் ‘என்றான்.

பொருள் · Meaning in Tamil

மன்றல் அம்குழல் சனகி - நறுமணம் மிக்க அழகிய கூந்தலையுடைய சீதை, தன் மலர்க்கையால் வயிறு கொன்று - தனது மலர் போன்ற கைகளால் வயிற்றை அலைத்து; அலந்தலைக் கொண்டு - அலைச்சலைக் கொண்டு; நெடுந்துயரிடைக் குளித்தல் - ஆழ்ந்த துன்பத்தில் மூழ்குதல்; அன்று இது என்றிடின் - அல்லது இது நடக்காது என்று கூறினால்; மயன்மகள் அத்தொழில் உறுதல் - மண்டோதரி அச்செயல்களை அடைதல் ஆம்; தலைப்படின் - நான் போர் செய்யப் புகுந்தால்; இன்று இரண்டின் ஒன்று - இன்றைக்கு இந்த இரண்டு செயல்களில் ஒன்றை; ஆக்குவென் என்றான் - நடைபெறச் செய்வேன் என இராவணன் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Either Caṉaki of the fragrant lovely hair, beating her belly with her flower-like hands,
  2. will plunge, distraught, into long and cruel grief;
  3. or, if not that, Mayaṉ's daughter will come to that same plight;
  4. today, once I join battle, I will bring about one of the two,' he said.

What the poem says

Irāvaṇaṉ swears a solemn vow. Today, when he enters the fight, one of two things will happen: either Cītai (Caṉaki, daughter of Caṉakaṉ) will beat her breast in widow's grief for Irāmaṉ, or Maṇṭōtari, his own queen and daughter of the architect Mayaṉ, will do so for him.

The vow shows that he knows this battle will be decisive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘maṉṟal am kuḻal caṉaki taṉ malark kaiyāṉ vayiṟu
koṉṟu, alantalaik koṭu neṭun tuyariṭaik kuḷittal;
aṉṟu itu eṉṟiṭiṉ, mayaṉ makaḷ at toḻil uṟutal;
iṉṟu, iraṇṭiṉ oṉṟu ākkuveṉ, talaippaṭiṉ ‘eṉṟāṉ.