கம்பராமாயணம் 9726 · யுத்த 34.27

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பல களம் தலை மௌலியோடு இலங்கலின் பல் தோள்
அலகு அளந்து அறியா நெடும் படைகேளாடு அலங்க,
விலகு அளம் தரு கடல் திரை விசும்பொடும் விம்ம,
உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான்.

பொருள் · Meaning in Tamil

பலகளம் தலை மௌலியோடு இலங்கலின் - பலகழுத்துக்களின் மீது தலைகள் அரசு முடிகளோடு விளங்கலின்; பல்தோள் அலகு அளந்து அறியா - பல தோள்கள் அளவால் அளந்தறிய முடியாமல்; நெடும் படைகளோடு அலங்க - நெடிய படைக்கலன்களோடு ஒளிர்ந்து நிற்க; விலகு அளம் தருகடல் - விலகியுள்ள உப்பளத்தை அளிக்கும் கடலால் சூழப்பட்ட; தரை விசும்பொடு வியப்ப - உலகத்தோர் வானோர் ஆச்சரியப்பட; உலகு அளந்தவன் வளர்ந்தவன் ஆம் - மூன்றுலகைத் தன் அடிகளால் அளந்த திருமால் வளர்ந்தது போல; என உயர்ந்தான் - என்று கூறும்படி வளர்ந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As his heads shone with crowns on many necks, and his many shoulders,
  2. beyond all measuring, swayed with long weapons,
  3. while the waves of the salt-pan-giving sea and the sky looked on in wonder,
  4. he rose up tall, as if he were the One who measured the worlds, growing.

What the poem says

Standing on his chariot, Irāvaṇaṉ seems to grow to an enormous height. His crowned heads on their many necks and his countless arms bristling with weapons tower above the battlefield.

The earth and heavens marvel, for he looks like Viṣṇu in his Trivikrama form, who grew until his strides measured the three worlds. The comparison is ironic, since the god he resembles is the one he is about to fight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pala kaḷam talai mauliyōṭu ilaṅkaliṉ pal tōḷ
alaku aḷantu aṟiyā neṭum paṭaikaḷōṭu alaṅka,
vilaku aḷam taru kaṭal tirai vicumpoṭu viyappa,
ulaku aḷantavaṉ vaḷarntavaṉ ām eṉa uyarntāṉ.