கம்பராமாயணம் 9727 · யுத்த 34.28

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விசும்பு விண்டு இரு கூறு உற, குலம் வரை வெடிப்ப,
பசும் புண் விண்டு என புவிபட, பகலவன் பசும் பொன்
தசும்பு நிள்று இடைந்து இரிந்திட, மதிதகை அமிழ்தின்
அசும்பு சிந்தி நொந்து உலைவுற, தோள் புடைத்து ஆர்த்தான்.

பொருள் · Meaning in Tamil

விசும்புவிண்டு இருகூறுற - வானம் பிளந்து இருபங்காக; கல்குலம் வெடிப்ப - மலைகள் வெடித்திட; பசும்புண் விண்டென - பசிய புண்கள் மேலும் பிளந்தது போல, பகலவன் பசும்பொன் தசும்பு நின்று இடைந்து இரிந்திட - கதிரவன், பசிய பொற்குடம் போல இருந்து தன் இடத்திலிருந்து திரிந்திட; மதி தகை அமிழ்தின் அசும்பு - சந்திரனின் பண்பாகிய அமுதத் துளிகளை; சிந்திநொந்து உலைவுற - சிந்தி வருந்தித் துன்பமடைய; தோள்புடைத்து ஆர்த்தான் - தோளைத் தட்டி இராவணன் ஆரவாரம் செய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the sky split in two, the mountains burst apart,
  2. the earth cracked like a fresh wound torn open, the sun, a pot of fine gold,
  3. gave way and fled from its place, and the moon, spilling drops
  4. of its rich nectar, suffered and shook, he slapped his shoulders and roared.

What the poem says

Irāvaṇaṉ slaps his arms and lets out a war cry. Its force is cosmic: the sky splits, mountains shatter, and the earth cracks open like a raw wound.

The sun, pictured as a golden pot, is shaken from its place, and the moon, believed to hold the nectar of immortality, trembles and spills it in drops.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vicumpu viṇṭu iru kūṟuṟa, kal kulam veṭippa,
pacum puṇ viṇṭeṉap puvi paṭa, pakalavaṉ pacum poṉ
tacumpu niṉṟu iṭaintu irintiṭa, mati takai amiḻtiṉ
acumpu cinti nontu ulaivuṟa, tōḷ puṭaittu ārttāṉ.