கம்பராமாயணம் 9729 · யுத்த 34.30

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘
பாட வேறுபாடு · Project Madurai reads
1சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர்ச் சுரிப்பு உற வீங்க,
இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கம் உற்று இரிய,
‘பரித்திலன் புவி, படர் சுடர் மணித் தலை பலவும்
விரித்து எழுந்தனன், அனந்தன் மீது ‘ எனப் பொலி மெய்யான்

பொருள் · Meaning in Tamil

சுரிக்கும் மண்டலம் - வானில் சுழலும் சூரிய, சந்திர மண்டலம்; தூங்கு நீர்ச் சுரிப்பு உற வீங்க - மிகுந்த நீருள்ள கடலிலே சுழற்சி உண்டாகிப் பொங்கவும்; இரைக்கும் பல்லுயிர் யாவையும் - ஆரவாரிக்கும் எல்லா உயிர்களும்; நடுக்கமுற்று இரிய - நடுங்கி நிலை கெடவும்; அனந்தன் - ஆயிரந் தலைகள் கொண்ட அனந்தன் எனும் பாம்பு; புவி பரித்திலன் - உலகைத் தாங்க முடியவில்லை; படர் சுடர் மணித்தலை பலவும் - விரிகின்ற ஒளியுடைய மணிகள் பூண்ட பல தலைகளும், மீது விரித்து எழுந்தனன் - மேலே படம் விரித்து எழுந்தனன்; என்பது ஓர் மெய்யான் - என்று தோன்றும் வகையில் ஒப்பற்ற உடலை உடையவன் ஆனான் (இராவணன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the circling orbs and the deep waters swelled into whirlpools,
  2. and all the many clamouring creatures trembled and fled,
  3. his body made it seem that 'Aṉantaṉ could not bear the earth, and has risen,
  4. spreading all his many shining jewelled heads above it'.

What the poem says

Irāvaṇaṉ standing in his chariot with his ten heads raised is compared to Aṉantaṉ, the thousand-headed serpent who holds up the earth.

It looks as though the serpent had given up its burden and reared up with its jewelled hoods spread wide. Accordingly, the sun and moon spin, the oceans churn into whirlpools and every living creature shrinks back in terror.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1curikkum maṇṭalam tūṅku nīrc curippu uṟa vīṅka,
iraikkum pal uyir yāvaiyum naṭukkamuṟṟu iriya,
‘parittilaṉ puvi, paṭar cuṭar maṇit talai palavum
virittu eḻuntaṉaṉ, aṉantaṉmītu ‘ eṉpatu ōr meyyāṉ