கம்பராமாயணம் 9736 · யுத்த 34.37

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கடக்களிறு எனத் தகைய கண்ணன் - மதம் கொண்ட ஆண்யானை எனத் தக்க கண்ணன் (இராமன்); ஒரு காலன் - ஒப்பற்ற இயமனுடைய; விடக் கயிறு எனப் பிறழும் வாள் - நஞ்சு போன்ற பாசக் கயிறு போல விளங்குகின்ற உடைவாளை; வலன் விசித்தான் - வலப் புறத்திலே கட்டிக் கொண்டான்; 'மடக்கொடி துயர்க்கும் - (உடைவாளைக் கட்டிக் கொண்ட இராமபிரான் இளங்கொடி போன்றவளாகிய சீதையின் துயரத்திற்கும்; நெடுவானின் உறைவோர் தம் - நீண்ட வானுலகில் வாழ்கின்ற தேவர்களுடைய, இடர்க்கடலினுக்கும் - துன்பமாகிய கடலுக்கும்; 'இன்று முடிவு' என இசைத்தான் - 'இன்றோடு முடிவு வந்தது' என்று கூறினான்.

உயிர் போக்கும் ஒற்றுமை பற்றிக் கூற்றுவனின் பாசக் கயிற்றை விடக் கயிறு என்றார். 'சீதை துன்புற்று மலர்க் கரத்தால் வயிறு பிசைந்து வேதனைப்படுதல் அல்லது மயன் மகள் (மண்டோதரி) அதே துயரடைதல் இரண்டில் ஒன்று இன்று செய்து முடிப்பேன்' என்று இராவணன் கூறிய பாடலோடு (கம்ப. 9667) இப்பாடற் கருத்து ஒப்பிட்டுணரத் தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Kaṇṇaṉ, as worthy as a rutting bull elephant, on his right side
  2. bound a sword that flashed like the poison noose of matchless Death,
  3. and declared, 'Today there will be an end to the grief of the tender creeper
  4. and to the sea of sorrow of those who dwell in the high heavens.'

What the poem says

Irāmaṉ, compared to a powerful elephant in rut and here called Kaṇṇaṉ (a name of Viṣṇu), buckles his sword on his right side. It is likened to the noose of Yama, god of death, because both take life.

He announces that today will end both the suffering of Cītai, delicate as a young creeper, and the long misery of the gods. The commentary contrasts this with Irāvaṇaṉ's earlier vow that either Cītai or his own queen Maṇṭōtari would be grieving by the day's end.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭak kaḷiṟu eṉat takaiya kaṇṇaṉ, oru kālaṉ
viṭak kayiṟu eṉap piṟaḻum vāḷ valaṉ vicittāṉ,
‘maṭakkoṭi tuyarkkum, neṭu vāṉiṉ uṟaivōrtam
iṭark kaṭaliṉukkum muṭivu, iṉṟu ‘eṉa icaittāṉ.