கம்பராமாயணம் 9741 · யுத்த 35.1

Section யுத்த காண்டம் / 35. இராமன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாதலி கொணர்ந்தனன் மகோததி வளாவும்
பூதலம் எழுந்துபடர் தன்மைய பொலந்தேர்;
சீத மதிமண்டலமும் ஏனை உளவும் திண்
பாதம் எனநின்றது பரந்தது விசும்பின்.

பொருள் · Meaning in Tamil

மகோததி வளாவும் - பெருங்கடல் சூழ்ந்துள்ள; பூதலம் எழுந்து படர் தன்மைய - பூவுலகமே எழுந்து இயங்குவது போன்ற தன்மை கொண்ட; பொலம் தேர்- பொன்மயமான தேரை; மாதலி கொணர்ந்தனன் - மாதலி கொண்டு வந்தான்; சீத மதி மண்டலமும் - குளிர்ச்சி கொண்ட சந்திர மண்டலமும்; ஏனை உளவும் - மற்றும் (மேல் மண்டலத்தில் உள்ளனவும்; திண் பாதம் என - தன்னுடைய வலிமையான பாதம் என்று சொல்லும் படியாக; நின்றது - (தேவர்கள் அனுப்பிய தேர் நின்றது; விசும்பில் படர்ந்தது - (தன் உயரத்தால் ஆகாயத்தின் மேல் பரவியது.

மகா + உததி; வளாவுதல் - சூழ்தல்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Mātali brought the golden chariot, which was like
  2. the whole earth girdled by the great ocean rising up and moving;
  3. it stood so that the cool orb of the moon and all the other spheres seemed
  4. like its strong feet, and it spread out across the sky.

What the poem says

This section tells how Irāmaṉ mounts Indra's chariot. Mātali, Indra's charioteer, arrives with it. The chariot is so vast that it looks like the whole sea-girt earth lifting up and moving.

It towers so high into the sky that the moon and the other heavenly spheres seem to be no more than its feet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mātali koṇarntaṉaṉ makōtati vaḷāvum
pūtalam eḻuntu paṭar taṉmaiya polan tēr;
cīta mati maṇṭalamum ēṉai uḷavum tiṇ
pātam eṉa niṉṟatu paṭarntatu vicumpil.