கம்பராமாயணம் 9742 · யுத்த 35.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குலக்கிரிகள் ஏழின் வலி கொண்டு - ஏழு குல மலைகளின் வலிமையைத் தன்னிடம் கொண்டதாய்; உயர் கொடிஞ்சும் - உயர்ந்த கொடிஞ்சு என்னும் உறுப்பையும்; அலைக்கும் உயர் பாரின் வலி - அலைகளால் இடையறாமல்) அலைக்கப்படுகின்ற நிலவுலகத்தின் வலிமை (கொண்டதுபோன்ற); ஆழியினின் அச்சும் - சக்கரத்தில் பொருந்திய அச்சினையும்; கலக்கு அற வகுத்தது - இடைவெளி இல்லாமல் நெருக்கமாகக் கோக்கப் பட்டது அந்த தேர்; கதத்து அரவம் எட்டின் - சினம் கொண்ட எட்டுப் பெருநாகங்களையும்; வலக் கயிறு கட்டியது - வலிமை கொண்ட கயிறாகக் கொண்டு கட்டப்பட்டது, அந்த தேர் வானை முட்டியது - (அத்தேர்) வானத்தையே முட்டிக்கொண்டு நின்றது.
குலக் கிரி - உயர்வுக்கும் உயர்வான மலைகள். நல்ல பொருள்களின் மேன்மையைக் குறிக்கச் 'சாதி' என்ற அடையமொழிகொடுத்துப் பேசுவது மரபு. குலக்கிரிகள் ஏழு, கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம் என்பனவாம். கச்சியப்பரின் கந்தபுராணம் இவ்வேழோடு கந்தமாதனத்தையும் சேர்த்துக் குலக் கிரிகள் எட்டு எனப் பேசும் (கந்த, ஆற்றுப்-/6). தேர் விரைந்து செல்லும்போது அதில் இருப்போர் விழுந்துவிடாமல் நிற்பதற்குப் பற்றிக் கொள்ளும் உறுப்பினைக் கொடிஞ்சு என்பர். அரவம் எட்டு, வாசுகி, அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Its tall kotiñcu post, holding the strength of the seven great mountains,
- and the axle in its wheels, with the strength of the high, wave-beaten earth,
- were fitted without a flaw; with the eight wrathful serpents
- as its strong ropes it was bound; it touched the sky.
What the poem says
Parts of the chariot are given cosmic counterparts. Its koṭiñcu, the tall post a warrior grips so as not to fall when the chariot races, has the strength of the seven great mountain ranges. Its axle has the strength of the whole earth, which is beaten by the waves of the sea.
It is lashed together with the eight great serpents of the directions as ropes, and it reaches up to the sky. The commentary lists the seven mountains and the eight serpents.