கம்பராமாயணம் 9743 · யுத்த 35.3

Section யுத்த காண்டம் / 35. இராமன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆண்டினொடு நாள் இருது திங்களிவை என்னா
மீண்டனவும் மேலனவும் ஈட்டி விரிதட்டில்
பூண்டு உளது; தாரகை மணிப்பொரு இல் கோவை
நீண்ட புனைதாரின் அது; நின்றுளது குன்றின்.

பொருள் · Meaning in Tamil

மீண்டனவும் மேலனவும் - கடந்தவையும் வரப்போவனவுமாகிய; ஆண்டினொடு - ஆண்டையும்; நாள், இருது, திங்கள் இவை என்னா - கிழமை, பருவம், மாதம் என்ற இவற்றின் காலப் பகுதிகளையும்; விரி தட்டில் பூண்டுளது - விரிந்த தேர்த்தட்டிலே குறிக்கப்பட்டுள்ளது; தாரகை மணி - நட்சத்திர மணிகள் கொண்டு கோத்த; பொரு இல் கோவை - ஒப்பற்ற மாலைகளையும்; புனை தாரினது - அழகு செய்யப்பட்ட மாலைகளையும் உடையது; குன்றின் நின்றுளது - மலைபோலப் பெருமிதமாகப் போர்க்களத்திலே வந்து நின்றது.

தேர்த் தட்டிலே காலக் குறிப்புகள் அமைப்பது தொன்மையான ஒரு வழக்கமெனத் தெரிகிறது. இக்காலங்களுக்கு உரிய தெய்வங்கள் தேர்த்தட்டில் இடம் பெறும் என்ற குறிப்பினை வை.மு.கோ. தருகிறார். "ஆண்டு முதலியன அவற்றிற்குரிய தேவதைகளையாம். தேவ மயம் அந்தேரென்க' என்பது அவர் குறிப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Years with days, seasons and months, all of these,
  2. those gone by and those to come, it bore set out on its broad platform;
  3. it wore long, decorated garlands, peerless strings
  4. of star-jewels; it stood there like a mountain.

What the poem says

Time itself is built into the chariot. On its broad floor are marked the years, months, seasons and days, past and future; the commentary explains that this means the deities presiding over each division of time are present there, so that the whole chariot is made of gods.

It is garlanded with strings of stars and stands on the battlefield as massive and majestic as a mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇṭiṉoṭu nāḷ irutu tiṅkaḷ ivai eṉṉā
mīṇṭaṉavum mēlaṉavum viṭṭu viri taṭṭil
pūṇṭu uḷatu; tārakai maṇip poru il kōvai
nīṇṭa puṉai tāriṉatu; niṉṟuḷatu kuṉṟiṉ.