கம்பராமாயணம் 9745 · யுத்த 35.5

Section யுத்த காண்டம் / 35. இராமன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மரத்தொடு மருந்து உலகில் யாவும் உளவாரித்
தரத்தொடு தொடுத்த கொடி தங்கியது; சங்கக்
கரத்தொடு தொடுத்த கடல்மீது நிமிர்காலத்து
உரத்தொடு தொகுத்த கதழ் ஓசை அதன் ஓதை.

பொருள் · Meaning in Tamil

மரத்தொடு மருந்து - மரங்கள் மற்றும் பூண்டுகள் என; உலகில் உள யாவும் வாரி - உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும் வாரி எடுத்து; தரத்தொடு தொடுத்த - உயர்தரம் கொண்டு தொடுக்கப்பட்ட; கொடி தாங்கியது - கொடியைத் தாங்கியிருப்பது; சங்கக்கரத்தொடு தொடுத்த கடல் - கூட்டமாயுள்ள அலைகளோடு பொருந்திய கடலானது; மீது நிமிர் காலத்து - மேலே பொங்கி வருகின்ற (ஊழிக்) காலத்து; உரத்தொடு கடுத்த கதழ் ஓசை - வலிமையொடு விரைவுகொண்டு உக்கிரமாக எழுப்பும் ஓசையே; அதன் ஓதை - அந்தத் தேரின் ஓசையாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. It bore a banner woven with care from everything in the world,
  2. trees and healing herbs and all, gathered up together;
  3. the sound of it was the fierce, swift, mighty roar the sea makes
  4. when, joined with its host of conch-bearing waves, it rises up at the end of time.

What the poem says

The chariot's flag is made of everything in the world, trees, medicinal plants and all, gathered and woven together.

Its rumble as it moves is like the furious roar of the ocean, with its countless waves, when it surges over the earth at the dissolution of the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1marattoṭu maruntu ulakil yāvum uḷa vārit
tarattoṭu toṭutta koṭi taṅkiyatu; caṅkak
karattoṭu toṭutta kaṭal mītu nimir kālattu
urattoṭu kaṭutta kataḻ ōtai ataṉ ōtai.