கம்பராமாயணம் 9748 · யுத்த 35.8

Section யுத்த காண்டம் / 35. இராமன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொலந்தேர் - பொன்மயமான அந்தத் தேர்; அருங் கரணம் ஐந்து - இந்திரியங்கள் ஐந்து; சுடர் ஐந்து - ஐந்து நெருப்புகள்; திசை நாலும் - மேலவற்றோடு நான்கு திசைகள்; ஒருங்கு அரணம் மூன்றும் - ஒருங்கே இணைந்து செயல்பட்ட மூன்று மதில்கள்; உழல் வாயு ஒரு பத்தும் - திரிகின்ற பத்து வகைக் காற்றும்; பெரும்பகலும் - பெரிய பகற்காலம்; என்று இவை - எனக் குறிக்கப்பட்ட இவை; பொரும் பரிகள் ஆகி - போர்க்குணம் உடைய குதிரைகளாகி, நனி பூண்டது - நன்கு பூணப்பட்டது.

வேதம் நான்கு, பூதம் ஐந்து, கரணம் ஐந்து, புலன் ஐந்து, திசை நாலு இவை தெளிவு எஞ்சியவற்றின் விரிவு வருமாறு; வேள்விகள் ஐந்து: கடவுள் வேள்வி, பிரம வேள்வி, பூத வேள்வி, மானிட வேள்வி, தென்புலத்தார் வேள்வி. கடல் ஏழு: உவர்நீர்க் கடல், நெய்க்கடல், கருப்பஞ் சாற்றுக்கடல், தேன் கடல், மலை ஏழு: கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம் இவற்றோடு கந்த மாதனத்தைச் சேர்த்து மலை எட்டு எனவும் உண்டு. உலகு ஏழு: பூலோகம், தவலோகம், சத்தியலோகம், மகாலோகம், சன லோகம், தவ லோகம், சத்திய லோகம். எரி மூன்று (வேள்வித்த): காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி சுடர் (நெருப்பு) ஐந்து நான்கு திசையில் நான்குடன் மேலே உள்ள கதிரவனைச் சேர்த்து பஞ்சாக்கினிகள் என்பர்; இராகம், கோபம், காமம், சடம், தீபனம் ஆகியவை பஞ்சாக்கினிகள் எனலும் ஒன்று. அரணம் மூன்று: பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆகிய திரிபுர மதில்கள். தச வாயுக்கள்: பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்பன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The five rare organs of sense, the five fires, the four directions,
  2. the three qualities joined together, the ten roaming vital winds,
  3. the long day and the long night: all these,
  4. as yoked war-horses, were finely harnessed to the golden chariot.

What the poem says

The list from the previous verse goes on, and these elements now become the horses that draw the chariot. They are the five sense-organs, the five fires, the four directions, the three qualities (the commentary reads 'three fortresses', the walls of Tripura), the ten vital airs that move through the body, and day and night.

The commentary explains each numbered set: the five daily sacrifices, the seven seas, the seven mountains, the seven worlds, the three ritual fires, the five fires, and the ten vital breaths, from prāṇa to dhanañjaya.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aruṅ karaṇam aintu, cuṭar aintu, ticai nālum,
oruṅku kuṇam mūṉṟum, uḻal vāyu oru pattum,
perum pakalum, nīḷ iravum, eṉṟu ivai, piṇikkum
porum parikaḷ āki naṉi pūṇṭatu, polan tēr.