கம்பராமாயணம் 9750 · யுத்த 35.10

Section யுத்த காண்டம் / 35. இராமன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘வினைப்பகை விசைக்கொடு விசும்பு உருவி, மான
மனத்தின் விசைபெற்றுளது வந்தது ‘என வானோடு
அனைத்து உலகமும் தொழ, அடைந்தது, அமலன்பால்;
நினைப்பும் இடை பின் பட நிமிர்ந்து உயர் நெடுந்தேர்.

பொருள் · Meaning in Tamil

நெடுந்தேர் - அந்தப் பெரிய தேர்; வினைப்பகை விசைக் கொடு - ஆன்மாவின் பகையாகிய வினையின் வேகத்தைக் கொண்டு; விசும்பு உருவி - ஆகாயத்தை ஊடுருவிக்கொண்டு; மான மனத்தின் விசை பெற்றுளது - பெருமைக்குரிய மன வேகத்தைப் பெற்றதாய்; வந்தது - வந்து சேர்ந்தது; என - என்று பெருமைப்படுத்தி; வானோடு அனைத்து உலகமும் தொழ - வானுலகத்தோடு எல்லா உலகங்களும் வணங்கும்படியாக; அமலன்பால் அடைந்தது - குற்றமற்றவனாகிய இராமனிடம் வந்துசேர்ந்தது; நினைப்பும் இடை பிற்பட - எண்ணம்கூடப் பின்னடையும்படியாக; நெடுந்தேர் - அந்தப் பெரிய தேர்; நிமிர்ந்தது - உயரமாக வந்து நின்றனது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'With the speed of karma, the enemy, it pierced the sky; it has come
  2. with the speed of the great mind itself,' they said, and as the heavens
  3. and all the worlds bowed to it, it reached the Pure One;
  4. leaving even thought behind, the tall chariot rose up there.

What the poem says

The chariot streaks through the sky with the speed of karma, called the soul's enemy because it follows a person relentlessly, and with the speed of the mind.

All the worlds bow as it passes. It arrives before Irāmaṉ, the stainless one, faster than thought, and stands towering beside him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘viṉaip pakai vicaik koṭu vicumpu uruvi, māṉa
maṉattiṉ vicai peṟṟuḷatu vantatu ‘eṉa vāṉōṭu
aṉaittu ulakamum toḻa, aṭaintatu, amalaṉpāl;
niṉaippum iṭai piṟpaṭa nimirntatu neṭun tēr.