கம்பராமாயணம் 9759 · யுத்த 35.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இனி ஐயம் இல்லை - இனிமேல் ஐயம் ஏதும் இல்லை; என எண்ணிய இராமன் - என்று தெளிவுற்று எண்ணிய இராமன்; நல்லவனை - நற்பண்புடைய மாதலியை நோக்கி; 'நீ உனது நாமம் நவில்க' என்ன - நீ உனது பெயரைச் சொல்லுக என்று கூற; வல் இதனை ஊர்வது ஒரு மாதலி எனப் பேர் சொல்லுவர் என - வலிய இத் தேரினை ஏறிச் செலுத்துவதற்குரிய மாதலி என்று என் பெயரைச் சொல்லுவார்கள் என்று; தொழுது - வணங்கி, நெஞ்சினொடு சொன்னான் - மனமாரக் கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Irāmaṉ, thinking 'Now there is no doubt',
- said to that good one, 'Tell me your name';
- and he bowed and answered from his heart, 'They call me
- Mātali, the one who drives this mighty chariot.'
What the poem says
Satisfied that there is no deception, Irāmaṉ asks the charioteer his name.
Mātali bows and answers sincerely that he is known as Mātali, the driver of this mighty chariot.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘illai iṉi aiyam ‘eṉa eṇṇiya irāmaṉ,
nallavaṉai, ‘nī uṉatu nāmam navilka! ‘eṉṉa,
‘val itaṉai ūrvatu oru mātali eṉap pēr
colluvar ‘eṉat toḻutu, neñciṉoṭu coṉṉāṉ.