கம்பராமாயணம் 976 · பால 15.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மெய் - தன் உடம்பின் அழகால்; போதின் நங்கைக்கு - மலர் மகளான திருமகளுக்கு; அணி அன்னவள் - ஆபரணம் போன்றிருக்கும் ஒருத்தி; வெண் பளிங்கில் - வெண்மை நிறமுள்ள பளிங்குப் பாறையில்; போது தாங்கி - மலர்தாங்கிய வண்ணம்; பொலிகின்ற தன் மொய்மேனி - (பிரதிபலிப்பதனால்) ஒளிர்கின்ற தன் நிழல் உடலை; நோக்கி - பார்த்து; இ பாவை - இந்தப் பெண்; எங்கோற்கு உயிர் அன்னவள் - என் கணவனுக்கு உயிர் அனையவள் ஆவாள்; என்ன உன்னி - என்று நினைத்து; நெடுங்கண் பனி சோர - தன் நீண்ட விழிகளிலிருந்து கண்ணீர் பெருக; கைப்போதினோடு நின்றாள் - கையில் ஏந்திய மலரோடு நின்றாள்.
மங்கையர்க்கெல்லாம் அணியாகிய திருமகளுக்கு, இவள் அணியாக இலங்கவல்ல அழகு உடையாள் என்பார், “போதின் நங்கைக்கு அணியன்னவள்” என்றார். தன் மேனியழகை இதுகாறும் குறைவாக நினைத்திருந்தவள் ஆதலின் பளிங்கில் தன் உருவை முழுமையுறக் கண்டு, மிக அழகு பொலியும் உருவாக இலங்குவது கொண்டு, மகளிர்க்கே உரிய ஐயவுணர்வோடு, இவளை என் கணவன் காணின் நிலை தளர்வான்; மனந் திரிவான் எனக் கருதி நெடுங்கண் பனி சோர்ந்தாள். ஒன்றைப் பிறிதொன்றாகக் கருதி மயங்குதலால் இது மயக்க அணி. கணவர் பால் தங்கட்குள்ள உரிமைப்பாட்டை, பிறர்யார்க்கும் பங்குதர அஞ்சும் மனப்பாங்கும், கணவர் மாட்டுள்ள பெரும்பற்றும் ஒருங்கு சுட்டியவாறு. பாவை - உவம ஆகு பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- One who could be an ornament to the lady of the true lotus, seeing in the white crystal
- her own body shining there, holding a flower that was no flower,
- thought, 'This doll of a girl must be as dear as life to my lord,'
- and stood with the flower in her hand and tears streaming from her long eyes.
What the poem says
A woman so beautiful that she could be an ornament for Tirumakaḷ, the lotus goddess of beauty, sees her reflection in a white crystal rock, holding the flower she has picked. She does not recognise herself. She takes the reflection for a rival her husband must surely love more than his life, and bursts into tears.
The verse is built on mistaking one thing for another. It also shows the jealous, possessive love the women feel for their husbands.