கம்பராமாயணம் 9761 · யுத்த 35.21

Section யுத்த காண்டம் / 35. இராமன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விழுந்து புரள் தீவினை குலத்தோடும் வெதும்ப,
தொழும் தகைய நல்வினை களிப்பினொடு துள்ள,
அழுந்து துயரத்து அமரர் அந்தணர் கைமுந்துற்று
எழுந்து தலை ஏற, இனிது ஏறினன் இராமன்.

பொருள் · Meaning in Tamil

நிலத்து விழுந்து புரள் தீவினை - தரையிலே விழுந்து புரளத் தொடங்கிவிட்ட தீவினை; வெதும்ப - வாடவும்; தொழுந்தகைய நல்வினை களிப்பினொடு துள்ள - வணங்கத் தக்க நல்வினை மகிழ்ச்சியால் துள்ளவும்; துயரத்து அழுந்து அமரர் அந்தணர் - துயரத்தில் அழுந்திக்கிடந்த தேவர்கள் அந்தணர் ஆகியோரின்; கை முந்துற்று எழுந்து தலை ஏற - கைகள் முந்திக்கொண்டு அவர்கள் தலைமேல் ஏறவும்; இராமன் இனிது ஏறினன் - இராமபிரான் இந்திரன் அனுப்பிய தேரின்மீது இனிதே ஏறினான்.

தீவினை வாடுதல், நல்வினை துள்ளுதல், அமரர் அந்தணர் கை தலைமேல் வைத்து வணங்குதல் ஆகியவை அவதார நோக்கமாகிய தீயோர் அழிவுக்கும் நல்லோர் துயர் நீக்கத்துக்கும் காரணமான வெற்றிமுகம் தெரிந்ததே யாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As Evil fell and rolled on the ground, scorched with pain,
  2. as worshipful Good leapt up with joy,
  3. and the hands of gods and Brahmins sunk in sorrow rose
  4. eagerly above their heads, Irāmaṉ gladly mounted.

What the poem says

Irāmaṉ climbs into Indra's chariot, and the moment is charged with meaning. Evil, personified, falls writhing on the ground, while Good leaps for joy.

The gods and Brahmins, who have long suffered under Irāvaṇaṉ, raise their joined hands above their heads in worship. The commentary explains that these signs show victory is now in sight: the purpose of the incarnation, destroying the wicked and relieving the good, is about to be fulfilled.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viḻuntu puraḷ tīviṉai nilattoṭu vetumpa,
toḻum takaiya nalviṉai kaḷippiṉoṭu tuḷḷa,
aḻuntu tuyarattu amarar antaṇar kai muntuṟṟu
eḻuntu talai ēṟa, iṉitu ēṟiṉaṉ irāmaṉ.