கம்பராமாயணம் 9764 · யுத்த 36.3

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்னது கண்ணில் கண்ட அரக்கனும், ‘அமரர் ஈந்தார்
மன் நெடுந் தேர் ‘என்று உன்னி, வாய் மடித்து எயிறு தின்றான்;
பின், ‘அதுகிடக்க ‘என்னா, தன்னுடைப் பெருந் திண் தேரை
மின் நகு வரிவில் செங்கை இராமன் மேல் விடுதி ‘என்றான்.

பொருள் · Meaning in Tamil

அன்னது - அந்தத் தேரை; கண்ணின் கண்ட அரக்கனும் - தன் கண்களால் பார்த்த இராவணனும்; 'மன் நெடுந் தேர் அமரர் ஈந்தார்'- 'நிலை பெற்ற பெரிய தேரைத் தேவர் கொடுத்தார்; என்று உன்னி - எனக் கருதி; வாய் மடித்து எயிறு தின்றான் - உதடுகளைக் கடித்துப் பற்களை மென்றான்; பின் - அதன்பிறகு; 'அது கிடக்க! - 'அது கிடக்கட்டும்; என்னா - என்று (அலட்சியமாய் கருதியவனாய்; தன்னுடைய பெருந்திண் தேரை - தன்னுடைய பெரிய வலிமையான தேரினை; மின் நகு வரிவில் செங்கை இராமன் மேல் - ஒளியைச் சிந்தும் கட்டமைந்த வில்லைச் செவ்விய கைகளில் ஏந்திய இராமபிரான் மீது; விடுதி' - விடுவாயாக; என்றான் - என்று (தன் பாகனுக்குக்) கட்டளையிட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The demon too saw it with his own eyes; thinking, 'The immortals have given him
  2. a great, tall chariot', he bit his lip and ground his teeth;
  3. then, saying 'Let that be', he said, 'Drive my own great strong chariot
  4. against Irāmaṉ, whose red hand holds the banded bow that flashes like lightning.'

What the poem says

Irāvaṇaṉ sees that the gods have given Irāmaṉ a divine chariot, and he bites his lips and grinds his teeth in fury.

Then he dismisses the matter and orders his charioteer to drive straight at Irāmaṉ, whose hand holds a bow that gleams like lightning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉatu kaṇṇiṉ kaṇṭa arakkaṉum, ‘amarar īntār
maṉ neṭun tēr ‘eṉṟu uṉṉi, vāy maṭittu eyiṟu tiṉṟāṉ;
piṉ, ‘atu kiṭakka ‘eṉṉā, taṉṉuṭaip perun tiṇ tērai
miṉ naku vari vil ceṅ kai irāmaṉmēl viṭuti ‘eṉṟāṉ.