கம்பராமாயணம் 9766 · யுத்த 36.5

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வார்ப்பொலி முரசின் ஓதை, வயவர் வாய் புடைப்பின் ஓதை,
போர்த் தொழில் களத்து மற்றும் முற்றிய பொம்மல் ஓதை,
ஆர்த்தலின், யாரும் பார்வீழ்ந்து அடங்கினர், இருவர் ஆடல்
தேர் குரல் ஓதை பொங்க, செவிமுற்றும் செவிடு செய்ய.

பொருள் · Meaning in Tamil

வார்ப்பொலி முரசின் ஓதை - வார்க்கட்டமைந்த முரசுகளிலிருந்து எழும் ஓசையும்; வாய்ப்புடை வயவர் ஓதை - போரியற்றும் வாய்ப்புபெற்ற வீரர்கள் எழுப்பும் ஓசையும், போர்த் தொழில்களத்து - போர் நிகழுகின்ற களத்தில்; மற்றும் முற்றிய பொம்மல் ஓதை - பிற போர்ப்படைகள் நிரம்பி நின்று எழுப்பிய மகிழ்ச்சி ஆரவார ஓசையும்; ஆர்த்தலின் - கூடியொலித்தலால்; யாரும் - (இரு திறத்திலுமுள்ள) அனைவரும்; பார்வீழ்ந்து அடங்கினர் - தரையில் விழுந்து அடங்கிப் போயினர்; இருவர் - இராமபிரான் இராவணன் என்னும் இருவருடைய, ஆடல் தேர்க்குரல் - அசைகின்ற தேர்களின் ஒலி; ஓதை பொங்க - முழக்கம் மேலெழுந்து; செவி முற்றும் செவிடு செய்த - அனைவர்தம் செவிகளையும் செவிடாக்கின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sound of the strap-bound drums, the sound of the able warriors,
  2. the swelling sound of everything else massed on the field of war,
  3. all roaring together, made everyone fall to the ground and lie still; and as the rumble
  4. of the two warriors' moving chariots rose up, it deafened every ear.

What the poem says

The din of battle becomes overwhelming: leather-bound war drums, the shouts of fighters, and the clamour of the massed armies all sound together, until soldiers on both sides fall to the ground and lie still.

Above it all rises the thunder of the two chariots, Irāmaṉ's and Irāvaṇaṉ's, as they move towards each other, deafening everyone.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vārp poli muraciṉ ōtai, vāyppuṭai vayavar ōtai,
pōrt toḻil kaḷattu maṟṟum muṟṟiya pommal ōtai,
ārttaliṉ, yārum pār vīḻntu aṭaṅkiṉar, iruvar āṭal
tērk kural ōtai poṅka, cevi muṟṟum ceviṭu ceyta.