கம்பராமாயணம் 9767 · யுத்த 36.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மன்னர்தம் மன்னன் மைந்தன் - (தசரதச் சக்கரவர்த்தி திருக் குமாரனாகிய இராமன்; மாதலி வதனம் நோக்கி - தன் தேர்ச்சாரதியாகிய மாதலியின் முகத்தைப் பார்த்து; 'காதலால் கருமம் ஒன்று கேட்டியால் - அன்போடு நான் கூறும் செயல் ஒன்றினைக் கேட்பாயாக; களித்த சிந்தை ஏதிலன் - மிதப்பு மிக்க சிந்தனை கொண்டவனாகிய (நம்) பகைவன்; மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை - தன்னுடைய மீறிய செயல்களையெல்லாம் செய்த பிறகு; என்தன் சோதனை நோக்கி - என் தூண்டுதலைக் கவனித்து, செய்தி- (உன் தேரோட்டும்) தொழிலைச் செய்வாயாக; துடிப்பு இலை- (இப்போது) விரைதல் வேண்டுவதில்லை; என்னச் சொன்னான் - என்று கூறினான்.
இராவணனைக் கண்டதும் மாதலி பால் ஏற்பட்ட பரபரப்பையும் விரைவையும் கவனித்தமையால் இராமன் இவ்வாறு கூறினான். 'பகைவனின் ஆர்ப்பாட்ட மெல்லாம் முடியட்டும். நமக்கு அவசரமில்லை' எனப் பணியாளிடம் உணர்த்திய பாங்கும், அவனிடம் 'காதலால்' கருத்துரைக்கும் பாங்கும் இராமபிரானின் தலைமைப் பண்பை உணர்த்துகின்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Looking at Mātali's face, the son of the king of kings
- said, 'Listen with affection to one thing I ask: after the enemy,
- his mind drunk with pride, has done all his excess,
- act as you see my signal; there is no need for haste.'
What the poem says
Irāmaṉ notices that Mātali is eager and agitated at the sight of Irāvaṇaṉ. He kindly asks him not to rush: let the arrogant enemy exhaust all his bluster first, and then drive as Irāmaṉ directs.
The commentary admires how Irāmaṉ calms his charioteer, speaking to him 'with affection', as a mark of true leadership.