கம்பராமாயணம் 9771 · யுத்த 36.10

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மீண்டவன் இளவல் நின்ற பாணியின் விலங்கா முன்னம்,
ஆண்தகை தெய்வத் திண்தேர் அணுகியது; அணுகுங் காலை,
மூண்டு எழு வெகுளியோடும், மகோதரன் முனிந்து, ‘முட்டத்
தூண்டுதி தேரை ‘என்றான்; சாரதி தொழுது சொல்வான்.

பொருள் · Meaning in Tamil

மீண்டவன் - இராவணன் பக்கமிருந்து திரும்பி வந்த மகோதரன்; இளவல் நின்ற பாணியின் - தம்பி இலக்குவன் இருந்த பக்கத்திற்கு; விலங்கா முன்னம் - நீங்குவதற்கு முன்னர்; ஆண்டகை - ஆண்மை மிக்க இராமனுடைய; தெய்வத்திண்தேர் - தெய்வத் தன்மை மிக்க வலிமையான தேர்; அணுகியது - நெருங்கி வந்தது; அணுகும் காலை - அவ்வாறு நெருங்கிய போது; மகோதரன் - மகோதரன்; மூண்டெழு வெகுளியோடும் - பொங்கி எழுகின்ற சினத்தோடு; முனிந்து - கோபித்து; 'முட்டத்தூண்டுதி தேரை' - தேரை முட்டும்படி செலுத்துவாயாக; என்றான் - என்று கட்டளையிட்டான்; சாரதி - தேர்ப்பாகன்; தொழுது சொல்லும் - வணங்கி உரைக்கத் தொடங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before he who had turned back could move off to where the younger brother stood,
  2. the manly one's strong, divine chariot came near; and as it came,
  3. Makōtaraṉ, with rage flaring up, said angrily, 'Drive the chariot
  4. straight at it!' The charioteer bowed and spoke.

What the poem says

Before Makōtaraṉ can reach Ilakkuvaṉ, Irāmaṉ's divine chariot draws near him. Flaring with anger, he orders his charioteer to ram it head on.

The charioteer bows and replies in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mīṇṭavaṉ iḷaval niṉṟa pāṇiyiṉ vilaṅkā muṉṉam,
āṇtakai teyvat tiṇ tēr aṇukiyatu; aṇukumkālai,
mūṇṭu eḻu vekuḷiyōṭum, makōtaraṉ muṉintu, ‘muṭṭat
tūṇṭuti tērai ‘eṉṟāṉ; cārati toḻutu coṉṉāṉ.