கம்பராமாயணம் 9773 · யுத்த 36.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்றலும் - என்று (சாரதி) கூறுதலும்; (மகோதரன் எயிற்றுப் பேழ்வாய் மடித்து - (கோரைப்) பற்கள் தோன்றும் பிளந்த தன் வாயை மடித்து; 'அடா - ஏடா; நின்னை எடுத்து - என்னை மறுத்துப் பேசிய) உன்னை வாரியெடுத்து; தின்றனன் எனினும் - உண்டேனாயினும்; பழிஉண்டாம்' - அதனால் எனக்குப் பழி நேர்ந்துவிடும்' (ஆதலால் அது தவிர்ந்தேன்); என - என்றுரைக்க; சீற்றம் சிந்தும் - சினத்தை வெளியிடும்; குன்றன தோற்றத்தான் தன் - மலை போன்ற உருவத்தையுடைய (மகோதரனின்); கொடி நெடுந்தேரின் நேரே - கொடிகள் கட்டிய இரதத்திற்கு நேராக; அவ்விராமன் திண்தேர் சென்றது - அந்த இராமபிரானுடைய வலிய தேர் சென்றது; திமிலத் திண்போர் - முழக்கத்தையுடைய பெரும் போர்; விளைந்தது - உண்டாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At this he bit his fanged, cavernous mouth: 'You wretch! Even if I picked you up
- and ate you, it would bring me shame,' he said; and straight at the tall bannered chariot
- of that mountain-like one spitting rage
- went Irāmaṉ's strong chariot; and a mighty, roaring battle broke out.
What the poem says
Makōtaraṉ is enraged by his charioteer's advice. He snarls that he would eat him on the spot, except that it would disgrace him to do so.
At that moment Irāmaṉ's chariot drives straight at Makōtaraṉ's bannered chariot, and a thunderous fight begins.