கம்பராமாயணம் 9776 · யுத்த 36.15

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வில் ஒன்றால், கவசம் ஒன்றால், விறல் உடைக் கரம் ஓர் ஒன்றால்,
கல் ஒன்று தோளும் தாளும் ஒன்று ஒன்றால், கழுத்தும் ஒன்றால்,
செல் ஒன்று கணைகள் ஐயன் சிந்தினன்; செப்பி வந்த
சொல் ஒன்றாய்ச் செய்கை ஒன்றாய்த் துணிந்தனன், அரக்கன் துஞ்சி.

பொருள் · Meaning in Tamil

ஐயன் - இராமபிரான்; வில் ஒன்றால் - (மகோதரனின் வில்லை ஒரு கணையாலும்; கவசம் ஒன்றால் - அவன் கவசத்தை ஒரு கணையாலும், விறலுடைக்கரம் - வலிமைமிக்க அவன் கைகளை; ஓர் ஒன்றால் - ஒவ்வொரு கணையாலும்; கல்லொன்று தோளும் ஒன்றால் - கற்பாறை போன்ற தோள்களை ஒரு கணையாலும்; கழுத்து ஒன்றால் - கழுத்தினை ஒரு கணையாலும், செல் ஒன்று கணைகள் கடிதின் வாங்கி - விரைவு பொருந்திய அம்புகளை வேகமாய்; சிந்தினான் - செலுத்தினான்; அரக்கன் - இராட்சதனான மகோதரன்; செப்பி வந்த சொல் ஒன்றாய் - (இராவணனிடம்) செப்பி வந்த மொழி ஒன்றாகவும்; செய்கை ஒன்றாய் - செயல் மற்றொன்றாகவும் ஆகும் வண்ணம், துஞ்சி துணிந்தனன் - இறந்து உடல் துண்டாகி வீழ்ந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With one for the bow, one for the armour, one each for the mighty hands,
  2. one for the rock-like shoulders, one for the neck, to take them swiftly,
  3. the Lord let fly arrows that sped as one; and the demon died, cut to pieces,
  4. his words one thing and his deeds another.

What the poem says

Irāmaṉ answers with a precise volley: one arrow breaks Makōtaraṉ's bow, one his armour, one cuts off each hand, one strikes his rock-like shoulders and one his neck.

Makōtaraṉ falls dead in pieces. The poet notes the irony: he had promised Irāvaṇaṉ one thing, to hold back Ilakkuvaṉ, and what he actually did was quite another.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vil oṉṟāl, kavacam oṉṟāl, viṟaluṭaik karam ōr oṉṟāl,
kal oṉṟu tōḷum oṉṟāl, kaḻuttu oṉṟāl, kaṭitiṉ vāṅka,
cel oṉṟu kaṇaikaḷ aiyaṉ cintiṉaṉ; ceppi vanta
col oṉṟāyc ceykai oṉṟāyt tuṇintaṉaṉ, arakkaṉ tuñci.