கம்பராமாயணம் 9778 · யுத்த 36.17

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பனிப்படா நின்றது என்னப் பரக்கின்ற சேனை பாறித்
தனிப்படான் ஆகில் உள்ளம் தாழ்கிலன் என்னும் தன்மை
நுனிப்படா நின்ற வீரன், அவன் ஒன்றும் நோக்கா வண்ணம்
குனிப்படா நின்ற வில்லால், ஒல்லையின் நூறிக் கொன்றான்.

பொருள் · Meaning in Tamil

பனிப்படா நின்றது என்ன - பனி எங்கும் பொழிந்து நின்றாற்போல; பரக்கின்ற சேனை - விரிந்திருக்கிற (இராவணன்) படை; பாறி - சிதறி; தனிப்படான் ஆகின் - தான் தன்னந் தனியனாகாதவரை; இன்னம் தாழ்கிலன் - (இவ்விராவணன்) இன்னும் கீழடங்கமாட்டான்; என்னும் தன்மை - என்னும் நிலையை; நுனிப்படா நின்ற வீரன் - நன்கு சிந்தித்து அறிந்த வீரனான இராமபிரான்; அவன் ஒன்றும் நோக்கா வண்ணம் - தன் செயல் ஒன்றையும் அவன் காணாதபடி; குனிப்படா நின்ற வில்லால் - வளைந்த வில்லால்; ஒல்லையில் - விரைவாக; நூறிக் கொன்றான் - சின்னா பின்னமாக்கி அழித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The hero, who had worked out that unless the army spreading out
  2. like falling mist were scattered and he were left alone, he would not yet be humbled,
  3. with his bow that stayed ever bent, so swiftly that the demon could see nothing of it,
  4. smashed that army and killed it.

What the poem says

Irāvaṇaṉ's remaining army spreads across the field like mist. Irāmaṉ reasons that Irāvaṇaṉ will not be brought low as long as he has troops around him; he must first be left alone.

With his constantly bent bow, Irāmaṉ destroys the whole army so quickly that Irāvaṇaṉ cannot even see how it happens.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṉip paṭāniṉṟatu eṉṉap parakkiṉṟa cēṉai pāṟit
taṉippaṭāṉ ākiṉ iṉṉam tāḻkilaṉ eṉṉum taṉmai
nuṉip paṭāniṉṟa vīraṉ, avaṉ oṉṟum nōkkāvaṇṇam
kuṉip paṭāniṉṟa villāl, ollaiyiṉ nūṟik koṉṟāṉ.