கம்பராமாயணம் 9779 · யுத்த 36.18

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அடல்வலி அரக்கற்கு அப்போது, அண்டங்கள் அழுந்த, மண்டும்
கடல்களும் வற்ற, எற்றிக் கால் கிளர்ந்து உடற்றுங் காலை,
வடவரை முதல ஆன மலைக்குலம் சலிப்ப மான,
சுடர் மணி வலயம் சிந்தத் துடித்தன, இடத்த பொன் தோள்.

பொருள் · Meaning in Tamil

அப்போழ்து - அவ்வேளையில்; அடல்வலி அரக்கற்கு - மிகுந்த ஆற்றலையுடைய இராவணனுக்கு; அண்டங்கள் அழுந்த - அண்டங்கள் அனைத்தும் தாழவும்; மண்டும் கடல்களும் வற்ற - நிறைந்த கடல்கள் எல்லாம் வற்றவும்; வெற்றிக்கால் - (எல்லாவற்றையும்) வென்று தீர்க்கும் (ஊழிக்) காற்று; கிளர்ந்து - பொங்கி யெழுந்து; உடற்றும் காலை - துன்புறுத்தும் பொழுது; வடவரை முதல ஆன - மேரு மலை முதலாக உள்ள; மலைக்குலம் சலிப்ப மான - பெருமலை வரிசைகள் அசைவன போன்று; சுடர்மணி வலயம் சிந்த - ஒளிவீசும் மாணிக்கங்கள் பதித்த வாகுவலயங்கள் சிதறுமாறு; இடத்த பொன்தோள் துடித்தன - இடதுபுறத்துப் பொன்மயமான தோள்கள் துடித்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment, for the demon of mighty strength, like the ranges of mountains,
  2. the northern mountain first among them, that shake when the all-conquering wind
  3. rises and rages, sinking the universes and drying up the crowded seas,
  4. his golden left shoulders throbbed, scattering their bright jewelled armlets.

What the poem says

Now come the omens of Irāvaṇaṉ's doom. His left shoulders begin to twitch, a bad sign for a man in Indian tradition, so violently that his jewelled armlets fly off.

They shake like Mount Mēru and the great mountain ranges when the wind at the end of an age rises, crushes the worlds and dries up the oceans.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭal vali arakkaṟku ap pōḻtu, aṇṭaṅkaḷ aḻunta, maṇṭum
kaṭalkaḷum vaṟṟa, veṟṟik kāl kiḷarntu uṭaṟṟumkālai,
vaṭavarai mutala āṉa malaik kulam calippa māṉa,
cuṭar maṇi valayam cintat tuṭittaṉa, iṭatta poṉ tōḷ.