கம்பராமாயணம் 9780 · யுத்த 36.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உலகெலாம் - உலகு முழுவதிலும்; உதிரமாரி - இரத்த மழை; சொரிந்தது - பொழிந்தது; வானம் - முகில்கள்; அதிர இடித்தது - உலகம் அதிரும்படி இடியொலி எழுப்பின; அருவரை பிதிர - பெருமலைகள் சிதறும்படி; அசனி - இடி; வீழ்ந்தது - (மலைகள் மேல்) விழுந்தது; ஒளிபெறாக் கதிரவன் தனை - ஒளி இழந்த ஞாயிற்றை; ஊர் - ஊர்கோளும்; கலந்தது - சூழ்ந்து கொண்டது; (ஆல் - அசை)
ஊர்கோள் - பரி வேடம்; பரிவேடம் கால அருக்கன் உதயத்துச் சாரில் வட்டந் தலமழிவாம் என்பர் முன்னோர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A rain of blood poured down over all the world;
- the sky thundered till everything shook; a thunderbolt fell
- so that the great mountains shattered; and a halo
- closed around the sun, which had lost its light.
What the poem says
More evil omens: blood rains down over the world, the sky roars with thunder, lightning strikes and splinters mountains, and the sun grows dim.
A ring (ūrkōḷ, a halo) forms around the sun. The commentary cites an old saying that a halo round the rising sun foretells the ruin of a land.